Advertisment

வார விடுமுறை நாட்கள் வருது... இன்னிக்கு கோயம்பேடு போனால் காய்கறிகளை அள்ளிட்டு வரலாம்!

ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று ரூ.100-க்கு என்று மொத்த விற்பனையிலே இந்த விலை.

author-image
WebDesk
New Update
tomato tamil onion tamil tomato

tomato tamil onion tamil tomato

today vegetable price vegatable price today : புதிய காற்றழுத்த சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்பதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது.

Advertisment

நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை ரூ. 50 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ. 63 ஆக உயர்ந்தது. ரூ.70க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று ரூ.100-க்கு என்று மொத்த விற்பனையிலே இந்த விலை.

இதேபோன்று சந்தையில், ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.20-லிருந்து ரூ.25 வரையும், நவின் தக்காளி ரூ.30-ல் இருந்து ரூ.35 வரையும், கேரட் ரூ.65-லிருந்து ரூ.70 வரையும், பீன்ஸ் ரூ.30-ல் இருந்து ரூ.40 வரையும், பீட்ரூட் ரூ.25-ல் இருந்து ரூ.30 வரையும் விற்கப்படுகிறது.

மேலும், சவ்சவ் ரூ.10-ல் இருந்து ரூ12 வரையும், முள்ளங்கி ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், வெண்டைக்காய் ரூ.20-ல் இருந்து ரூ 25 வரையும் , கத்திரிக்காய் ரூ.20-ல் இருந்து ரூ.25 வரையும், பாகற்காய் ரூ.20-ல் இருந்து ரூ25 வரையும், புடலங்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், கோவைக்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், சுரைக்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், முருங்கைக்காய் ரூ.25-ல் இருந்து ரூ.30 வரையும், பச்சை மிளகாய் ரூ.20-ல் இருந்து ரூ.25 வரையும் , இஞ்சி ரூ.30-ல் இருந்து ரூ.50 வரையும், அவரைக்காய் ரூ.30-ல் இருந்து ரூ.35 வரையும் விலை உயர்த்தி விற்கப்பட்டது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment