Advertisment

தக்காளி, வெங்காயம் விலை இன்று எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

இன்று ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்தும் சில காய்கறிகளின் விலை குறைந்தும் காணப்படுகிறது.

author-image
WebDesk
New Update
tomato tamil onion tamil tomato

tomato tamil onion tamil tomato

tomato tamil onion tamil tomato : சென்னையில் இந்த டிசம்பர் மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் வீழ்ச்சியடைகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. எனினும் இன்று தக்காளி விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்தும் சில காய்கறிகளின் விலை குறைந்தும் காணப்படுகிறது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 28) ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று வரை தக்காளியின் விலை ஒரு வாரமாகவே 10 ரூபாயிலேயே இருந்தது. வெங்காயம் விலை 25 ரூபாயிலேயே உள்ளது. அவரைக்காய் விலை நேற்று 35 ரூபாயிலிருந்து இன்று 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் 30 ரூபாய்க்கும், பீட்ரூட் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.15

வெங்காயம் - ரூ.25

அவரைக்காய் - ரூ.40

பீன்ஸ் - ரூ.30

பீட்ரூட் - ரூ.15

வெண்டைக்காய் - ரூ.30

நூக்கல் - ரூ.18

உருளைக் கிழங்கு - ரூ.22

முள்ளங்கி - ரூ.8

புடலங்காய் - ரூ.15

சுரைக்காய் - ரூ.15

பாகற்காய் - ரூ.25

கத்தரிக்காய் - ரூ.20

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment