Advertisment

ஷிவ் நாடார், கலாநிதி மாறன்… தமிழகத்தின் டாப் பணக்காரர்கள் பட்டியல் இதுதான்!

Tamilnadu richest man list in tamil: நாம் பார்க்கவுள்ள இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள சில தொழிலதிபர்கள் டாப் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top 10 richest person in tamilnadu 2022 Tamil News

Richest man in TAMILNADU 2022

Business news in tamil: 2022ம் ஆண்டுக்கான தமிழக டாப் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இடம்பிடித்துள்ள தொழிலதிபர்கள் குறித்தும், அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும் இங்கு சுருக்கமாக பார்க்கலாம். தவிர, நாம் பார்க்கவுள்ள இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள சில தொழிலதிபர்கள் டாப் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Advertisment

ஷிவ் நாடார்

publive-image

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் (HCL) நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் சிவ சுப்பிரமணியம் என்ற ஷிவ் நாடார். இவர் தமிழகத்தின் தொழிலதிபரும் கல்வியாளருமாக வலம் வருகிறார். சாதாரண மனிதராகவும், மிக எளிமையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 28.7 பில்லியன் டாலர்கள் ஆகும். ஹெச்சில் தலைவர் பதவியில் இருந்து ஷிவ் நாடார் விலகிய நிலையில், அவரது மகள் ரோஷினி நாடார் புதிய தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.

ராம் ஸ்ரீராம்

publive-image

கவிதார்க் ராம் ஸ்ரீராம் இந்திய-அமெரிக்க பில்லியனர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கூகுளின் முதல் முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் கூகுள் நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர் அமேசான் நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கிறார்.

ராம் ஸ்ரீராம் தனது கல்லூரி படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடித்தவர். தற்போது அமெரிக்க சிட்டிசனாகவும் இருக்கும் இவரின் சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலார்கள் ஆகும்.

கலாநிதி மாறன்

publive-image

தமிழகத்தில் கலாநிதி மாறன் குறித்து அறியாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு அனைவரும் பரீட்சயமானவர் கலாநிதி மாறன். சன் நெட்ஒர்க் தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள், எஃப்எம் வானொலி நிலையங்கள், டிடிஎச் சேவைகள், கிரிக்கெட் அணி மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், 2010 முதல் 2015 வரை இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 270 கோடி டாலர்கள் ஆகும்.

வெள்ளையன்

அருணாசலம் வெள்ளையன் முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது சென்னையில் உள்ள முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவராக உள்ளார். பிப்ரவரி 2018 இல், அவர் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார், அந்த இடத்தை அவரது உறவினர் எம்.எம்.முருகப்பனுக்கு வழங்கினார். அவர் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் EID பாரி லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.

publive-image

இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாக உள்ள முருகப்பா குழுமத்தை வழிநடத்தி வரும் வெள்ளையனின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர்கள் ஆகும்.

என். சீனிவாசன்

publive-image

சென்னையைச் சேர்ந்த நாராயணஸ்வாமி சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவர். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் (பிசிசிஐ) தலைவராகவும் பணியாற்றினார். ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் இவர் இருந்து வருகிறது. இவரது சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர்கள் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Tamil Business Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment