Advertisment

குறைந்த பிரீமியம்... ரூ10 லட்சம் வரை பலன்..! நம்பிக்கையான போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்ஸ்!

business news in tamil, top post office scheme to get 10 lakhs insurance: தபால் அலுவலக காப்பீட்டில் எந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது மற்றும் அதிலிருந்து சரியான நன்மைகளை பெறுவது போன்றவை பொது மக்களுக்கு சவாலனதாக இருக்கும். இதற்கு தீர்வாக தபால் அலுவலகம் தனது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கும் ஐந்து பாலிசிகளை பற்றி பார்ப்போம். இவை பொதுமக்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் கூடுதல் தொகை கிடைக்கவும் உதவும். அந்த 5 தபால் நிலைய திட்டங்கள் கிராம் சுரக்‌ஷா, கிராம் சந்தோஷ், கிராம் சுவிதா, கிராம் சுமங்கல், கிராம் பிரியா

author-image
WebDesk
New Update
Post,office,schemes,post,savings,tax ememption

Post,office,schemes,post,savings,tax ememption, வரி,திட்டம், தபால் துறை,வரிவிலக்கு, சேமிப்பு திட்டங்கள், வட்டிவிகிதம்

தபால் அலுவலக காப்பீட்டில் எந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது மற்றும் அதிலிருந்து சரியான நன்மைகளை பெறுவது போன்றவை பொது மக்களுக்கு சவாலனதாக இருக்கும். இதற்கு தீர்வாக தபால் அலுவலகம் தனது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கும் ஐந்து பாலிசிகளை பற்றி பார்ப்போம். இவை பொதுமக்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் கூடுதல் தொகை கிடைக்கவும் உதவும். அந்த 5 தபால் நிலைய திட்டங்கள் கிராம் சுரக்‌ஷா, கிராம் சந்தோஷ், கிராம் சுவிதா, கிராம் சுமங்கல், கிராம் பிரியா

Advertisment

கிராம் சுரக்‌ஷா

கிராம் சுரக்‌ஷா அல்லது முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கை ஆகும். இது பாலிசிதாரர் 80 வயதை எட்டியதும் அல்லது மரணமடைந்ததும் அவரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு சம்பாதித்த போனஸூடன் உறுதிப்படுத்தப்பட்ட தொகை பாலிசிதாரருக்கு கிடைக்கும்.

பாலிசியை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 55 ஆண்டுகளாக இருக்கலாம். பாலிசிக்கான குறைந்தபட்ச தொகை ரூ.10,000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ.10 லட்சம். பாலிசி வாங்கியவர்கள் பாலிசி வாங்கிய 4 ஆண்டுகளுக்குப்  பிறகு கடன் வசதியைப் பெறலாம். பாலிசிதாரர்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை சரண்டர் செய்து கொள்ளலாம். கிராம் சுரக்‌ஷா பாலிசிய்ல் கடைசியாக அறிவிக்கப்பட்டப் போனஸ் ஆண்டுக்கு ரூ.1000 க்கு  ரூ.65 ஆகும்.

கிராம் சந்தோஷ்

இது எண்டோவ்மெண்ட் அஷ்யூரன்ஸ் பாலிசி இந்தத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட முதிர்வு வயதை அடையும் வரை அதாவது 35,40,45,50,55,58 மற்றும்  60 வயதை  எட்டும் வரை உறுதிசெய்யப்பட்ட மற்றும் திரட்டப்பட்ட போனஸின் அளவிற்கு நியமனதாரருக்கு உத்தரவாதம்  அளிக்கப்படுறது.

பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால் நியமனதாரருக்கு திரட்டப்பட்ட போனஸூடன் முழு தொகையும் உறுதி செய்யப்படுகிறது. பாலிசியை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 55 ஆண்டுகளாக இருக்கலாம். பாலிசிக்கான குறைந்தபட்ச தொகை ரூ.10,000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ.10 லட்சம் பாலிசி வாங்கியவர்கள் பாலிசி வாங்கிய 3 ஆண்டுகளுக்குப்  பிறகு கடன் வசதியைப் பெறலாம். பாலிசிதாரர்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை சரண்டர் செய்து கொள்ளலாம். கிராம் சுரக்‌ஷா பாலிசியில் கடைசியாக அறிவிக்கப்பட்டப் போனஸ் ஆண்டுக்கு ரூ.1000 க்கு  ரூ.50 ஆகும்

கிராம் சுவிதா

இது முழு ஆயுள் காப்பீட்டு கொள்கையாகும். இது பாலிசி எடுத்த ஐந்து ஆண்டுகளின் முடிவில் எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றலாம். பாலிசிதாரர்களுக்கு முதிர்வு வயதை அடையும் வரை திரட்டப்பட்ட போன்ஸூடன் உறுதிப்படுத்தப்பட்ட தொகைக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

இறப்பு ஏற்பட்டால் நியமனதாரருக்கு திரட்டப்பட்ட போன்ஸூடன் முழு தொகையும் உறுதி செய்யப்படுகிறது. பாலிசியை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 45 ஆண்டுகளாக இருக்கலாம். பாலிசிக்கான குறைந்தபட்ச தொகை ரூ.10,000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ.10 லட்சம். பாலிசி வாங்கியவர்கள் பாலிசி வாங்கிய 4 ஆண்டுகளுக்குப்  பிறகு கடன் வசதியைப் பெறலாம். பாலிசிதாரர்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை சரண்டர் செய்து கொள்ளலாம். கிராம் சுரக்‌ஷா பாலிசி கடைசியாக அறிவிக்கப்பட்டப் போனஸ் ஆண்டுக்கு ரூ.1000க்கு  ரூ.65 ஆகும்.

கிராம் சுமங்கல்

இது எண்டோவ்மெண்ட் அஷ்யூரன்ஸ் திட்டம். இதில் அதிகபட்ச வருமானம் ரூ.10 லட்சம், அவ்வப்போது வருமானம் தேவைப்படுபவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. பாலிசிதாரருக்கு உயிருடன் இருக்கும்போது அவ்வப்போது சலுகைகள் அளிக்கப்படுகிறது. பாலிசிதாரர்களின் எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் இத்தகைய கொடுப்பனவுகள் கவனத்தில் கொள்ளப்படாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் திரட்டப்பட்ட போன்ஸூடன் முழு தொகை உறுதி செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டவருக்கு கிடைக்கும்.

கிராம சுமங்கலுக்கு  15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் பாலிசி கால அவகாசம் உள்ளது. பாலிசி வாங்க குறைந்தப்பட்ச வயது 19 ஆண்டுகள் அதிகபட்ச வயது 20 ஆண்டுகால பாலிசிக்கு 40 ஆண்டுகள், மற்றும்15 ஆண்டு கால பாலிசிக்கு 45 ஆண்டுகள்

நன்மைகள்

15 ஆண்டு பாலிசி- 6ஆண்டுகள், 9ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் தலா 20% மற்றும் முதிர்ச்சியின் போது திரட்டப்பட்ட போன்ஸூடன் 40% தொகை கிடைக்கும்.

20 ஆண்டு பாலிசி- 8ஆண்டுகள்,  12ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் தலா 20% மற்றும் முதிர்ச்சியின் போது திரட்டப்பட்ட போன்ஸூடன் 40% தொகை கிடைக்கும். பாலிசியின் கீழ் கடைசியாக அறிவிக்கப்பட்ட போனஸ் ஆண்டுக்கு ரூ.1000 க்கு ரூ.47 ஆகும்

கிராம் பிரியா

இது ஒரு குறுகிய கால பணத்தை திரும்பப் பெறும் திட்டம். பாலிசிதாரர்களுக்கு காப்பீட்டு தொகைக்கு 10 வருடங்களுக்கு ஆயுள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் உயிருடன் இருக்கும்போதே சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. பாலிசித் தொகை 4 ஆண்டுகளுக்கு பிறகு 20%-, 7 ஆண்டுகளுக்குப் பிறகு 20% மற்றும் 10 ஆண்டுகளுக்கு பிறகு 60% திரட்டப்பட்ட போன்ஸூடன் வழங்கப்படும்.

பாலிசிக்கான குறைந்தபட்ச வயது 20 அதிகபட்ச வயது 45 ஆண்டுகள். பாலிசியின் கீழ் குறைந்தபட்ச தொகை ரூ.10000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ.10 லட்சம். கடைசியாக அறிவிக்கப்பட்ட போன்ஸ் ஆண்டுக்கு ரூ.1000 க்கு ரூ.47 ஆகும்

மேலும், வெள்ளம் வறட்சி பூகம்பம் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் பிரீமியம் நிலுவைத் தொகைக்கு ஒரு வருடம் வரை வட்டி வசூலிக்கப்படுவதில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme Insurance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment