Advertisment

சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்

டொரன்ட் கேஸ் நிறுவனத்துக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் சென்னைக்கான நகர எரிவாயு உரிமம் வழங்கியதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்றவரின் நியாயமற்ற அதிக ஏலத்தை கட்டுப்பாட்டாளர்கள் நிராகரித்திருக்க வேண்டும் என்ற அதானி கேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai gas infrastructure, chennai gas license, torrent gas license, சென்னை நகர எரிவாயு உரிமம், டொரன்ட் கேஸ், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, supreme court judgement on petroleum and Natural Gas Regulatory Board, gas license, Supreme Court, Natural Gas Regulatory Board, adoni group, Torrent gas

chennai gas infrastructure, chennai gas license, torrent gas license, சென்னை நகர எரிவாயு உரிமம், டொரன்ட் கேஸ், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, supreme court judgement on petroleum and Natural Gas Regulatory Board, gas license, Supreme Court, Natural Gas Regulatory Board, adoni group, Torrent gas

டொரன்ட் கேஸ் நிறுவனத்துக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் சென்னைக்கான நகர எரிவாயு உரிமம் வழங்கியதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்றவரின் நியாயமற்ற அதிக ஏலத்தை கட்டுப்பாட்டாளர்கள் நிராகரித்திருக்க வேண்டும் என்ற அதானி கேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Advertisment

எரிவாயு கட்டுப்பாட்டாளரான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பி.என்.ஜி.ஆர்.பி) 2019 இல் ஏற்பாடு செய்திருந்த ஏலத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோக உள்கட்டமைப்பை அமைப்பதற்கான உரிமத்தை டோரண்ட் பெற்றிருந்தது.

பி.என்.ஜி.ஆர்.பி.-யின் இந்த உரிமத்தை எதிர்த்து அதானி கேஸ் லிமிடெட் வழக்கு தொடர்ந்தது. டோரன்ட் கேஸின் ஏலம் நியாயமற்ற முறையில் அதிக அளவில் உள்ளது. பி.என்.ஜி.ஆர்.பி ஏலத்தை நிராகரித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதானி கேஸ் நிறுவனத்தின் அனைத்து சர்ச்சைகளையும் நிராகரித்ததோடு, பி.என்.ஜி.ஆர்.பி. ஏலம் அளித்ததற்கு எதிரான மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. அதானி குழுமத்தின் கருத்துகளை நிராகரித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், பிப்ரவரி 17 ம் தேதி தனது தீர்ப்பில், உச்சநீதிமன்றம் “ஏல ஆவணத்தின் பிரிவு 14.2-ன் படி ஏலங்களின் நியாயத்தை தீர்மானிக்கும் அதிகாரம் பி.என்.ஜி.ஆர்.பி.-யிடம் மட்டுமே உள்ளது. பி.என்.ஜி.ஆர்.பி.-யின் நியாயத்தன்மை குறித்த தீர்மானம் தன்னிச்சையாகவோ அல்லது கொள்கைகளை மீறுவதாகவோ இல்லை.” என்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத் திர்ப்பைத் தொடர்ந்து, டொரன்ட் கேஸ் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூரில் நகர எரிவாயு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க இந்த தீர்ப்பு உதவும் என்று தெரிவித்துள்ளது.

Chennai Gas Cylinder
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment