Advertisment

மீண்டு வரும் பயணத் துறை.. கொரோனாவுக்கு முன்பை விட உள்நாட்டு விமானப் பயணம் அதிகரிப்பு

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு முந்தைய நிலையை விட உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
மீண்டு வரும் பயணத் துறை.. கொரோனாவுக்கு முன்பை விட உள்நாட்டு விமானப் பயணம் அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கு, பாதிப்புகளுக்குப் பிறகு விமானப் போக்குவரத்துறை மீண்டு வருகிறது. பல்வேறு நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பு வருகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இளைஞர்கள், குடும்பத்தினர் வெளி மாநிலங்களுக்கு சென்று விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. விமானப் போக்குவரத்து சேவை அதிகரித்துள்ளது. 2019 இன் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட உள்நாட்டு விமானப் பயணம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

விமானக் கட்டணம் உயர்வு, ஹோட்டல், விடுதி கட்டண உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர் பணவீக்கம் இருந்தபோதிலும் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. இது டிசம்பர் 24 அன்று ஒரு நாளில் 4,35,500 என்ற மிக உயர்ந்த உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்தது. இது கொரோனாவுக்கு முந்தைய எண்ணிக்கையை விட உயர்வு. கொரோனாவுக்கு முன் 2019-ம் ஆண்டு அதிகபட்சமாக ஒரு நாள் எண்ணிக்கை 4,20,000 எனப் பதிவானது.

கூட்ட நெரிசல்

சமீபத்தில் விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளானது இதற்கு சான்றாக உள்ளது. இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த சம்பவம் நடந்தது. விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் கவனம் வரை இது சென்றது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு பயணம் மட்டுமல்ல

குறுகிய தூர சர்வதேச பயணங்களுக்கும் இது பொருந்துகிறது.

"கொரோனாவின் போது வீட்டிலேயே அடைபட்டிருந்தோம். அதனால் விடுப்புகள் செலவழிக்கப்படவில்லை. தேவைகள் பூர்த்தியாகவில்லை. பாசிட்டிவ் எனர்ஜி, உணர்வுகள் ஆகியவற்றின் கலவையான காரணங்களால் தற்போது உள்நாட்டு பயணப் போக்குவரத்து தூண்டப்படுகிறது. இது தொற்றுநோய்க்கு முந்தைய தேவையை 110 சதவீதத்திற்கும் மேலாக விஞ்சுகிறது. குடும்பங்களைத் தவிர, தம்பதிகளை அதிகம் காண்கிறோம். குறிப்பாக தேனிலவு செல்பவர்கள். அதோடு, இந்தியாவின் இளம் தொழில் வல்லுநர்கள் என பலர் பயணிக்கின்றனர். இதனால் நுகர்வோர் அதிகரித்துள்ளது" என தாமஸ் குக் இந்தியாவின் தலைவர் மற்றும் நாட்டின் விடுமுறை காலத்திற்கான தலைவர் ராஜீவ் காலே தெரிவித்தார்.

அதிகம் விரும்பும் சுற்றுலா தலம்

எவ்வாறாயினும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரை இந்த போக்கு நம்பிக்கைக்குரியதாக இல்லை வெளிநாட்டினர் ஓய்வு பயணங்களுக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்திய டிராவல் ஏஜெண்ட்ஸ் ஃபெடரேஷனின் தலைவர் அஜய் பிரகாஷ் கூறுகையில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையில் 30-35 சதவீதம் மட்டுமே உள்ளனர் என்றார்.

கோவா, காஷ்மீர், ராஜஸ்தான், கேரளா மற்றும் அந்தமான் போன்ற பகுதிகள் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. அதே நேரத்தில், கிளியர்ட்ரிப் மற்றும் தாமஸ் குக் போன்ற பயண சேவை அதிகாரிகள் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, வடகிழக்கு மற்றும் வாரணாசி, பிரயாக்ராஜ், பூரி, வைஷ்ணோதேவி, உஜ்ஜைன் மற்றும் திருப்பதி போன்ற ஆன்மிகச் சுற்றுலா தலங்களுக்கும் பயணிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகின்றன.

மேலும், தொற்றுநோய்க்கு முந்திய காலகட்டத்தை விட ஆன்மீகப் பயணத்தில் 85 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது. இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிக கட்டணங்கள்

இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு எளிதாக விசா விதிமுறைகள் உள்ளதாலும் சர்வதேச பயணங்களும் எளிதாகிறது. டிராவல் போர்டல் கிளியர்ட்ரிப் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, துபாய், பாங்காக், லண்டன், ஃபூகெட், ஆண் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் இடங்களாகும்.

அதிக கட்டணங்கள் இருந்தபோதிலும் தேவை அதிகரித்துள்ளது. இந்தியர்கள் முன்பை விட அதிகம் செலவிடுகிறார்கள்.இந்த விடுமுறைக் காலத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதன் சிறந்த ஆண்டைப் பதிவுசெய்யும் அதே வேளையில், இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளும் இந்தியர்களால் பயனடைந்துள்ளன என்று பயண முகவர்கள் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் பிரகாஷ் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment