Advertisment

IRCTC News: இதை ஃபாலோ பண்ணுனா உங்களுக்கு ரயில் டிக்கெட் கன்ஃபார்ம்!

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கையில், சில டிரிக்ஸ்களை பின்பற்றினால் நிச்சயமாக உங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகும். அந்த சிம்பிள் டிரிக்ஸை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இந்தியா முழுவதும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு ஏதுவாக உள்ளன.

Advertisment

முன்பு போல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. ஸ்மார்ட்போனில் எளிதாகச் செய்துவிடலாம். இத்தகைய வசதிகளை கொண்ட ரயில் போக்குவரத்தின் டிக்கெட் முன்பதிவில் சில சமயங்களில் சிக்கல் ஏற்படும். ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தான ரயிலில், குறிகிய அளவிலே டிக்கெட் கைவசம் இருக்கும். அது முடிந்தவுடன், ஆர்ஏசியில் டிக்கெட் புக்கிஙஅ சென்றுவிடும். குறிப்பிட்ட ஆர்ஏசி எண்ணிக்கை முடிந்துவிட்டால், வெயிடிங் லிஸ்டில் சென்றுவிடும். இந்த வகையில் பெரும்பாலும் டிக்கெட் முன்பதிவு உறுதியாகுவது கடினமாகும்.

இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கையில், சில டிரிக்ஸ்களை பின்பற்றினால் நிச்சயமாக உங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகும். அந்த சிம்பிள் டிரிக்ஸை தான் இச்செய்தி தொகுப்பில் பார்க்க போகிறீர்கள்…

போர்டிங் மற்றும் இறங்கும் இடத்தை மாற்றுதல்

கன்பார்ம் டிக்கெட்டைப் பெறுவதற்கான எளிதான வழிகளில் இதுவும் ஒன்றாகும். உங்களது போர்டிங் மற்றும் இறங்கும் ரயில் நிலையத்தை லைட்டாக மாற்ற வேண்டும். உதாரணமாக நீங்கள் ஏறவுள்ள ரயில் நிலையத்திற்கு பதிலாக, அடுத்த நிலையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு, சில சந்தர்ப்பங்களில், நீங்கள் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் ஆனால், டிக்கெட் புக்கிங் கன்பார்ம் ஆகிவிடும்.

போர்டிங் பாயிண்ட் தள்ளிச்சென்றாலும், டிக்கெட் கன்பார்மால் உங்கள் பணம் மீச்சமாகிறது. மேலும், முன்பதிவுச் செய்யும் சமயத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த ரயில் நிலையத்திற்குப் பிறகு உங்களுக்கு விருப்பமான போர்டிங் பாயின்ட் வருகிறது என்றால், நீங்கள் போர்டிங் பாயிண்ட்டையும் மாற்றிக்கொள்ளலாம்.

பயணத்தை பிரித்து புக் செய்வது

இதில் நீங்கள் வெவ்வேறு ரயில்களில் பயணிக்க வேண்டும் என சொல்லவில்லை. மாறாக பயணத்தை ஒரே ரயிலுக்குள் 2 அல்லது 3 பாகங்களாகக் கூறலாம், அது உறுதியான டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இருப்பினும், நீங்கள் ரயிலுக்குள் நீண்ட தூரம் பயணித்தால் மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல், ஸ்லீப்பர் கிளேஸில் ஆர்ஏசி அல்லது வெயிடிங் கிளேஸ் தான் கிடைக்கும் பட்சத்தில், வகுப்பை மாற்ற முயற்சியுங்கள். இது கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், கன்பார்ம் டிக்கெட் உங்களுக்கு கிடைக்கும். இந்த வழிமுறையில் டிக்கெட் கன்பார்ம் ஆக அதிக வாய்ப்புள்ளது.

பயணிகளின் விவரங்களை சேகரித்து வைத்தல்

பயண விவரங்களை தெர்ந்தேடுத்தவுடன், பயணிகளின் விவரங்களைச் பதிவிட வேண்டும்.இது சில சமயங்களில் நேரம் எடுக்கும்.நிறைய பேர் வரும் பட்சத்தில், ஒவ்வொரு நபரின் விவரங்களை பதிவிடுவது கூடுதல் சுமையாகும். இதற்காக, பயணிகளின் விவரங்கள் ஏற்கனவே ஐஆர்சிடிசியில் சேர்த்துவிட வேண்டும். இதன் மூலம் நேரம் மீச்சமாகுவதுடன் எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யலாம். ஒரு ஸ்டேப் குறைவதுமூலம், டிக்கெட் கன்பார்ம் ஆகுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது. இந்த செயல்முறை அனைத்து சூழ்நிலைகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு பெருதவுயாக இருக்கும்.

ஈஸி கட்டண முறை

ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் வாயிலாக டிக்கெட் புக்செய்கையில், கட்டண செலுத்த பல முறைகளை பார்க்க முடியும். இதில் பலர் குழப்பமடைவார்கள். எனவே, பெரும்பாலும் மிகவும் ஈஸி வழியான கிரெடிட், டெபிட் கார்ட் அல்லது யூபிஐ கட்டணம் தேர்ந்தெடுக்கையில், முதலில் இருக்கும் IRCTC iPay கிளிக் செய்யுங்கள்

மற்ற கட்டண முறைகளில் பணம் செலுத்த தெரிந்தவர்கள் தாராளமாக அதனை அணுகலாம். அமேசான், பேடிஎம் போன்றவற்றில் பணம் வேலட்டில் இருப்பதால், டிக்கெட் புக்கிங் எளிதாக முடிந்துவிடும். உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்டண முறையை தேர்ந்தெடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment