வங்கிகள் யார் யாருக்கு எதன் அடிப்படையில் கடன் வழங்கும் தெரியுமா?

கடன் வழங்கும் நிறுவனங்களின் மேல் சந்தேகக் கண்களை வீசத் தவறுவதில்லை.

பல காரணங்களுக்காக வங்கிகளில் கடன் பெற தனிநபர் கடன் திட்டங்கள் தான் கவர்ச்சியாக தெரிகிறது. மிகவும் எளிதாக கேட்கவும், நிதி தேவைகளுக்கேற்ற வசதியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவும் தனிநபர் கடன் உள்ளது.

இத்தகைய கடன்களுக்கு செக்யூரிட்டி தேவையில் என்பதால், யாருடைய தலையீட்டையும் வேண்டி மன்றாடத் தேவையில்லை. தனிநபர் கடன்களை திரும்பச் செலுத்தும் முறையும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. சில பேருக்கு மிகவும் எளிதாக பணம் பெற உதவும் வழியாக தனிநபர் கடன் தோன்றினாலும், வேறு சிலர் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் மேல் சந்தேகக் கண்களை வீசத் தவறுவதில்லை.

சிலர் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள், பைக், சிறிய கார் போன்றவற்றை வாங்குகிறார்கள். கிரெடிட் கார்டை பொறுத்தவரை எடுக்கப்பட்ட பணத்துக்கு உடனடியாக வட்டி போடத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த வட்டி ஒரு ஆண்டுக்கு 40-45% இருக்கும். அந்தக் கடனை உங்களால் கட்ட முடியாத பட்சத்தில் அதனை இ.எம்.ஐ. கடனாக மாற்றிக் கொண்டால், வட்டி 25-30% ஆகக் குறையும்.

பெர்சனல் லோன் வாங்க பயம் வேண்டாம்.. இதையெல்லாம் தெரிஞ்சிகோங்க!

வங்கிகளில் வாங்கும் கடன் ஏன் சிறந்தது?

கடனை 60 மாதங்களில் திரும்பக் கட்டலாம். கடன் தொகை 50 ஆயிரத்துக்கு மேலே செல்லும் போது மூன்றாம் நபர் கேரண்டி அல்லது என்.எஸ்.சி., சொத்து போன்றவற்றை அடமானமாகக் கொடுக்கலாம்.

கார் கடன் வாங்குபவர் மாதச் சம்பளக்காரர் எனில், அவரின் மாதச் சம்பளத்தைப் போல் 24-36 மடங்கும், சுயதொழில் செய்பவர் என்றால், ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 6 மடங்கும் கடனாகக் கிடைக்கும்.

ஈஸியான ஆவணங்கள்:

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல், வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரி, வருமானம் போன்றவற்றுக்கான ஆதாரம், சம்பள ரசீது, ஃபார்ம் 16, ஆறு மாதத்துக்கான வங்கிக் கணக்கு விவரம், கையெழுத்துக்கான ஆதாரம் போன்ற ஆவணங்களை மாதச் சம்பளம் பெறிபவர்கள் கொடுத்தால் மட்டுமே போது.

மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் தேவையான் ஆவணங்கள் இருந்தாலே போதும் வங்கிகள் கண்ணை மூடிக் கொண்டு உங்களுக்கு கடனை வழங்குவார்கள்.

சேமிப்பு பணம் குறித்த பயமே வேண்டாம்! எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள சூப்பரான வசதிகள்

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close