அதிரடி ஆஃபர்.. ஃபிக்ஸட் டெபாசிட்க்கு 7.90% வட்டி..!, Unity Small Finance bank offers 7.90 interest on FD | Indian Express Tamil

அதிரடி ஆஃபர்.. ஃபிக்ஸட் டெபாசிட்க்கு 7.90% வட்டி..!

பண்டிகை கால ஆஃபராக சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் வைப்புத் தொகைக்கு 7.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.40 சதவீதமும் வட்டி வழங்குகின்றன.

அதிரடி ஆஃபர்.. ஃபிக்ஸட் டெபாசிட்க்கு 7.90% வட்டி..!
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நவம்பர் 25 முதல் FD விகிதங்களை உயர்த்தியுள்ளது.

யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி வங்கி) தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ஷகுன் 501 (Shagun 501) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 501 நாள் நிலையான வைப்புத்தொகைக்கு, சில்லறை வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 7.90% கவர்ச்சிகரமான வருமானத்தைப் பெறுவார்கள்.

மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 8.40% சம்பாதிக்கலாம். இருப்பினும், இந்த பண்டிகை ஆஃபர் அக்டோபர் 31, 2022 வரை முன்பதிவு செய்த டெபாசிட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
அதேபோல், யூனிட்டி வங்கி மொத்த வைப்புத்தொகைகளுக்கான (ரூ. 2 கோடிக்கும் அதிகமான) வட்டி விகிதங்களையும் திருத்தியுள்ளது.

அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

A) ரூ.2 கோடிக்கும் அதிகமான பிக்ஸ்ட் டெபாசிட்

B) ஃபிக்ஸட் டெபாசிட் சில்லறை முதலீடு

C) மொத்த வைப்பு விகிதங்கள் (CALLABLE BULK DEPOSIT RATES)

D) முன்கூட்டியே மீட்டெடுக்க முடியாத நிதிப் பாதுகாப்பு (NON-CALLABLE BULK DEPOSIT RATES)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Unity small finance bank offers 7 90 interest on fd