Advertisment

காய்கறி விலை.. தக்காளி, வெங்காயம் விலை பார்த்து ஷாக் ஆகாதீங்க!

ஒரு கிலோ வெங்காயம் விலை 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
tomato tamil tomato vegetable tamil

tomato tamil tomato vegetable tamil

veg price koyambedu tamil onion : சென்னையில் கடந்த மூன்று மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். எனினும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (நவம்பர் 25) ஒரு கிலோ வெங்காயம் விலை 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 52 ரூபாயாக இருந்தது. தக்காளி விலை நேற்று 20 ரூபாயிலிருந்து இன்று 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் 30 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், வெண்டைக்காய் விலை 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.30

வெங்காயம் - ரூ.60

அவரைக்காய் - ரூ.45

பீன்ஸ் - ரூ.45

பீட்ரூட் - ரூ.20

வெண்டைக்காய் - ரூ.30

மாங்காய் - ரூ.80

நூக்கல் - ரூ.15

உருளைக் கிழங்கு - ரூ.40

முள்ளங்கி - ரூ.15

புடலங்காய் - ரூ.25

சுரைக்காய் - ரூ.20

பாகற்காய் - ரூ.15

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment