Advertisment

காய்கறி விலை தொடர்ந்து குறைவு.. இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!

பீன்ஸ் விலை நேற்று 35 ரூபாயிலிருந்து இன்று 30 ரூபாயாகக் குறைந்துள்ளது

author-image
WebDesk
New Update
koyambedu tamil koyambedu market

koyambedu tamil koyambedu market

vegetables tamil vegetable tamil : சென்னையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்விலேயே இருந்தது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து காய்கறி விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வாரத்தின் 2ம் நாளான இன்று சில காய்கறிகளின் விலை குறைந்திருக்கிறது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 15) ஒரு கிலோ அவரைக்காய் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 45 ரூபாயாக இருந்தது. ஒரே நாளில் 15 ரூபாய் குறைந்துள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் விலை நேற்று 35 ரூபாயிலிருந்து இன்று 30 ரூபாயாகக் குறைந்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.15

வெங்காயம் - ரூ.30

அவரைக்காய் - ரூ.30

பீன்ஸ் - ரூ.30

பீட்ரூட் - ரூ.15

வெண்டைக்காய் - ரூ.20

மாங்காய் - ரூ.40

நூக்கல் - ரூ.15

உருளைக் கிழங்கு - ரூ.30

முள்ளங்கி - ரூ.10

புடலங்காய் - ரூ.15

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment