Advertisment

பெரும் சரிவில் ஆட்டோமொபைல் துறை - வரலாறு காணாத இறங்குமுகத்தில் வாகனவிற்பனை

Automobile industry : ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
automobile industry, degrowth, unemployment, vehicles, sales, ஆட்டோமொபைல் துறை, வேலைவாய்ப்பின்மை, வாகனங்கள், விற்பனை

automobile industry, degrowth, unemployment, vehicles, sales, ஆட்டோமொபைல் துறை, வேலைவாய்ப்பின்மை, வாகனங்கள், விற்பனை

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

2019 ஆண்டு முதல் காலாண்டில் பயணிகள் வாகனத்தின் விற்பனை 18.4 சதவீதம் சரிந்துள்ளது. இந்தியாவில் ஆட்டோ மொபைலை பொருத்தளவில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேர் பலன் அடைகிறார்கள்.

‘கார்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. இதே நிலைமை நீடித்தால் 10 லட்சம்பேராவது வேலை இழப்பார்கள்' என ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ராம் வெங்கட ரமணி கூறுகின்றார்.

மேலும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது பயன்படுத்துவது போன்ற அரசின் நிலைப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் உடனடியாக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. வரியையும் ஆட்டோ மொபைல் துறையில் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Automobile
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment