வேலையை தூக்கிப்போடுங்க! X-ல் போஸ்ட் செய்து மாதம் ரூ. 30,000 ஈட்டும் 21 வயது இன்ஜினியர்

கனவ் என்ற அந்த மாணவர், தான் X தளத்தில் ஈட்டிய வருமானத்தைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்துள்ளார். ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 30 வரை அவர் ₹67,419 சம்பாதித்ததாகவும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ₹32,000 ஈட்டியதாகவும் அது காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
X revenue

X monetization

சமூக வலைத்தளங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான தளங்கள் மட்டுமல்ல, அவை வருமானம் ஈட்டக்கூடிய வழிகளும் கூட. சமீபத்தில், 21 வயது இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisment

அந்தப் பதிவில், "X-ல் பதிவிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், எனது கல்லூரியின் சராசரி கேம்பஸ் வேலைவாய்ப்புச் சம்பளத்தை விட அதிகமாக உள்ளது. நான் இதை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகின்றன," என்று கூறியிருந்தார்.

கனவ் என்ற அந்த மாணவர், தான் X தளத்தில் ஈட்டிய வருமானத்தைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்துள்ளார். ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 30 வரை அவர் ₹67,419 சம்பாதித்ததாகவும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ₹32,000 ஈட்டியதாகவும் அது காட்டுகிறது.

Advertisment
Advertisements

கனவ், X-ன் விளம்பர வருவாய் பகிர்வு திட்டமான 'Creator Revenue Sharing' மூலம் வருமானம் ஈட்டுகிறார். இந்தத் திட்டத்தில் சேர, பிரீமியம் சந்தா மற்றும் அதிக ஈடுபாடு (engagement) அவசியம்.

கனவ் தொழில்நுட்பம் சார்ந்த உள்ளடக்கங்களை X-ல் பதிவிட்டு வருகிறார். சில மாதங்களில் அவரது பார்வையாளர்கள் படிப்படியாக அதிகரித்துள்ளனர். தற்போது அவருக்கு 882 சரிபார்க்கப்பட்ட (verified) பின்தொடர்பவர்களும், 28.4 மில்லியன் இம்ப்ரெஷன்களும் உள்ளன.

சவால்களும், சர்ச்சைகளும்

கனவ்வின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர், இது தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தனர். மற்றொரு புறம், சிலர் இந்த தகவலை நம்புவதற்கு கடினமாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

ஒரு பயனர், "5.2k பதிவுகளும், 5.2k பின்தொடர்பவர்களும் என்பது மிகவும் அரிதானது. இது மூன்று மாதங்களில் சாத்தியமென்றால், நீங்கள் நாள் ஒன்றுக்கு 57 பதிவுகள் அல்லது விழித்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3.6 பதிவுகள் இட்டிருக்கிறீர்கள் என்று பொருள். இது உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது, ஆனால் படிப்பை/வேலையைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இது சாத்தியமா என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது," என்று கருத்துத் தெரிவித்தார்.

மற்றுமொரு பயனர், "நீங்கள் எப்படி இவ்வளவு விரைவாக வளர்ந்தீர்கள்? பாராட்டுக்குரியது," என்று கனவ்வின் உழைப்பைப் பாராட்டினார். "இதை எப்படி தொடங்குவது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எனக்கு உதவ முடியுமா?" என்று மற்றொரு பயனர் ஆர்வத்துடன் கேட்டார்.

கனவ்வின் கதை, சமூக வலைத்தளங்கள் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்பதற்கான ஒரு சான்றாக உள்ளது. ஆனால், அதற்கு அசாத்திய உழைப்பும், சரியான உத்தி வகுப்பும் தேவை என்பதை இந்தப் பதிவு உணர்த்துகிறது.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: