வாழ்க்கை நிகழ்வுகளில் நிச்சயமற்ற தன்மையும் கணிக்க முடியாத தன்மையும் ஆயுள் காப்பீட்டை வாங்குவதற்கு முழு முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆயுள் காப்பீடு, வாழ்க்கையின் எதிர்பாராத மாறுபாடுகளிலிருந்தும் விபத்து மற்றும் சிக்கலான நோய்கள் போன்ற நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய நிதி பேரழிவுகளிலிருந்து மட்டும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதில்லை. ஆனால் சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களின் இறப்பிலிருந்தும் நிதி ஸ்திரதன்மையை அளிக்கிறது. நிதி உறுதியற்ற தன்மையிலிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க மிக திறமையான வழி ஒரு பருவ ஆயுள் காப்பீடு பாலிசி (term insurance policy) எடுப்பதுதான்.
ஒரு பருவ காப்பீட்டு பாலிசி எடுத்த பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்தாருக்கு உறுதி செய்யப்பட்ட முழு தொகையையும் அளித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏதாவது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவுகிறது. மிக முக்கியமாக, பருவ திட்டம் தான் உங்களிடம் இருக்க வேண்டிய ஒரே வகையான காப்பீட்டுத் திட்டம் ஏனென்றால் இது குறைந்த விலைக்கு அதிகபட்ச பாதுகாப்பை உங்களுக்கு வழங்குகிறது. மேலும் இப்போது நீங்கள் பருவ காப்பீட்டை 99+ வயதிலும் கூட வாங்கலாம் இது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செய்யமுடியாதது.
கொரோனா நிவாரணம்: அரசு சலுகையை அப்படியே வழங்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி
2019 இறுதியில் துவங்கிய கோவிட் -19 போன்ற ஒரு பரவலான உலகளாவிய மருத்துவ நெருக்கடி காரணமாக ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது மிகவும் சிக்கலாக்கியிருக்கலாம். எனினும் உங்களிடம் செயலில் உள்ள ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசி இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு தொற்று நோய் காரணமாக இறக்க நேரிட்டால் உங்களுடைய குடும்பம் நிச்சயமாக இறப்பு பயன்களைப் பெறுவார்கள். பெரும்பாலான ஆயுள் காப்பீட்டாளர்களின் கூற்றுப்படி, ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகள் கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களை உள்ளடக்கும்.
உங்களிடம் ஏற்கனவே ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசி இருந்து, அதற்கான பிரீமியம் தொகையை நீங்கள் சரியான நேரத்தில் கட்டி வந்தால் நீங்கள் கவலை பட தேவையில்லை. எனினும் உங்களுக்கு மிகவும் ஆபத்தான பகுதி அல்லது தொற்று அதிகமாக பரவியுள்ள பகுதிக்கு செல்லும் திட்டம் ஏதும் இருந்தால் நீங்கள் திட்டத்தை மாற்றி தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ வகைப்பாட்டை மாற்றக் கூடும் மேலும் அரசு உத்தரவுக்கு எதிராக நீங்கள் பயணம் மேற்கொண்டால் உங்கள் காப்பீட்டு உரிமைத் தொகை நிராகரிக்கப்பட வழிவகுக்கலாம். கோவிட் -19 (CDC COVID-19) பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்டுக்கு நீங்கள் பயணித்து இறக்க நேரிட்டால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களது இறப்பு நன்மைகளை உங்கள் குடும்பத்துக்கு கொடுக்க மறுக்கலாம்.
கோரோனா இந்தியாவின் எதிர்காலத்தில் பிசாசு போல தொங்குகிறது; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
கோவிட் -19 போன்ற ஒரு தொற்று நோய் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ஆயுள் காப்பீடு வாங்க வேண்டுமா என்று யோசிக்கும் நபர்களுக்கான குறுகிய மற்றும் எளிதான பதில் வேண்டும் என்பதுதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”