zero balance account: வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையினை நிர்வகிக்கவே தனியாக சம்பாதிக்க வேண்டும் போல... இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் சரியான தீர்வு. எனவே,ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் குறிந்து தெரிந்துக்கொள்ளுங்கள்...
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை அனைத்து இந்தியாவின் முக்கிய அரசு மற்றும் தனியார் வங்கிகளில் திறக்கலாம். அதேபோல் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை யார் வேண்டுமானால் திறக்கலாம்.
ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறக்க பணம் ஏதும் தேவையில்லை. குறைந்தபட்ச இருப்பு தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தனிநபர் கணக்கு, ஜாயிண்ட் கணக்கு போன்ற சேமிப்பு கணக்கு சேவைகள் அனைத்தும் ஜீரோபேலன்ஸ் சேமிப்பு கணக்கில் கிடைக்கும். அனைத்து வகை சேமிப்பு கணக்குகளுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் கிடைக்கும்.
ரூபே டெபிட் கார்டு வேண்டும் என்றாலும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ.10 முதல் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
read more.. எஸ்பிஐ கஸ்டமர்ஸ் இந்த தகவல் உங்களுக்கு தான்.. வீட்டின் வாசலுக்கே வரும் எஸ்பிஐ சேவை!
ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கிற்கும் இணையதள வங்கி சேவை அனுமதிகள் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கை மூட சில வங்கிகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை வைத்துள்ளவர்களால் அதே வங்கி நிறுவனத்தில் வேறு சேமிப்பு கணக்கை திறக்க முடியாது.
பிற சேமிப்பு கணக்குகள் திறந்தால் 30 நாட்களுக்குள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை மூட வேண்டும்.