Advertisment

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு எழுதியதால் அச்சம் - மாணவர்கள் கருத்து!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் தேர்வு தமிழ் தாள் எப்படி இருந்தது என்று தேர்வெழுதிய மாணவர்கள், சிலர் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாததால் அச்சமாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
12th Public Exam, how feel exam students, students comments, 12th exam tamilnadu, 12th exam time table, 2022 tamil nadu, 12th exam 2022, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு எழுதியதால் அச்சம், மாணவர்கள் கருத்து, 12th exam date 2022 cbse, 12th exam pattern, tomorrow 12th exam, 12th exam date 2022 state board, 12th exam time table 2021 tamil nadu

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் தேர்வு தமிழ் தாள் எப்படி இருந்தது என்று தேர்வெழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகள் தேர்வு எழுதாததால் அச்சமாக இருந்ததாகவும் படித்தது எதுவும் வரவில்லை என்றும் முதல் தேர்வு கடினமாக இருந்தது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் இன்று (மே 5) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முதல் தேர்வாக தமிழ் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. 8.22 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் 32,674 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் ஆப்செண்ட் ஆகியுள்ளதாக தேர்வுத்துறை தகவல் தெரிவித்திருந்தது.

இதனிடையே, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் தாள் எழுதிய மாணவர்கள், தேர்வு எப்படி இருந்தது என்றும் தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததா? தேர்வு எப்படி எழுதினார்கள் என்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல், இந்த முறை தேர்வு எழுதியதால் அச்சமாக இருந்ததாக தெரிவித்தனர்.

“வினாத்தாளில் வினாக்கள், புத்தகத்தில் இருந்தது போல கேட்கவில்லை. கேள்விகளை கொஞ்சம் மாற்றிக் கேட்டிருந்தார்கள். ஆனால், அதே பதில்தான்” என்று ஒரு மாணவி வினாக்கள் எப்படி கேட்கப்பட்டிருந்தன என்பது குறித்து கருத்து தெரிவித்தார்.

மற்றொரு மாணவி, கேள்விகள் கடினமாக இல்லை. புத்தகத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்டிருந்தார்கள். எளிதாக எழுதினோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு மாணவி, கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் தேர்வு எழுதவில்லை. இந்த ஆண்டு தேர்வு எழுதியதால் தேர்வு எழுதும்போது அச்சமாக இருந்தது என்று கூறினார்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் முதல் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு பற்றி கலவையாக கருத்து தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment