Advertisment

மார்க் ஷீட், கிரேட் ஷீட் பெறவும் 18% ஜி.எஸ்.டி... மாணவர்களை அதிரவைத்த அண்ணா பல்கலை.!

Anna University announces 18% GST to charge for issuing certificates: அனைத்து சான்றிதழ்களையும் பெற கட்டணத்துடன் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Anna university, Anna university exam, Anna university new syllabus, Anna university exam new pattern, அண்ண பல்கலைக்கழகம், அண்ணா பல்கலை, பொறியியல் படிப்பு, 40 சதவீதம் மதிப்பெண் பிராக்டிகல், பொறியியல் கல்வி, Tamil nadu engineering examination, tn engineering exam new pattern, Tamil nadu engineering exam internal marks

அண்ணா பல்கலைக்கழகத்தில் இனி அனைத்து விதமான சான்றிதழ்களையும் பெற கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும் என தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகம் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், 2017ஐ ஏற்றுக்கொண்டதால், மாற்றுச் சான்றிதழ், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விடைத்தாள் நகல் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

அதேநேரம், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சேவைகளுக்கும் ஜிஎஸ்டி சட்டம் 2017ன் படி வரி விதிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டதாரி மாணவர்கள்  தற்காலிக சான்றிதழ்கள் (provisional certificates), ஒருங்கிணைந்த மதிப்பெண் அறிக்கைகள் (consolidated mark statements), மதிப்பெண் சான்றிதழ்கள் (grade sheets) மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களுக்கு (degree certificates) ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்கள், தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்களின் நகல் சான்றிதழ்களைப் பெறுவதற்கும் அவர்கள் வரி செலுத்த வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான கட்டணங்களுடன் மேலே குறிப்பிட்டுள்ளபடி ஜிஎஸ்டியை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து சேவைகளுக்கும் பல்கலைக்கழகம் வரி வசூலிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் விரும்புவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், மாணவர்களின் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை மதிப்பாய்வு செய்ய பல்கலைக்கழகம் குழு அமைக்கும் என்றார். தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு 700 வசூலித்து வருகிறது.

மேலும், மாணவர்களின் பாட சுமையை குறைக்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. நூலகத்திற்கு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு பல்கலைக்கழகம் பேராசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் துணைவேந்தர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Anna University Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment