Advertisment

ஜனவரியில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Anna University Current Semester Exam: பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வு வரும் ஜனவரி மாதம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

author-image
WebDesk
New Update
anna university, Tancet 2021 Exam

anna university, Tancet 2021 Exam

Anna University Current Semester Exam : பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வு வரும் ஜனவரி மாதம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

Advertisment

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டன.

இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில்," பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வு வரும் ஜனவரி மாதம் ஆன்லைனில் நடைபெறும். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று பிரித்து தேர்வை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். செமஸ்டர் தேர்விற்கான தேதிகள் பின்னர்  அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment