Advertisment

ஜூலை 30க்குள் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு - அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017 ஒழுங்குமுறைப்படி முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படும். மற்ற பல்கலைக் கழகங்களில் ஜூன் 15-ல் தொடங்கி ஜூலை 15-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
anna university exam start from june 14th, anna university, ஜூன் 14 முதல் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் தொடக்கம், அண்ணா பல்கலைக்கழகம், tamil nadu, anna university exam, university exam start from june 15th, higher education minister ponmudi, minister ponmudi press meet, பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தேர்வு ஜூன் 15 முதல் தொடக்கம், other university exam details

அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017 ஒழுங்குமுறைப்படி முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், மற்ற பல்கலைக் கழகங்களில் ஜூன் 15-ல் தொடங்கி ஜூலை 15-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Advertisment

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது: “அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017 ஒழுங்குமுறைப்படி முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படும். 2017 ஒழுங்குமுறைப்படி எழுதிய இளநிலை மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி தேர்வு தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.

கொரோனா காலத்தில், மற்ற பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை ஓரிரு பல்கலைக்கழகங்களில் அரியர்ஸ் தேர்வுகளை நடத்தியுள்ளனர். மற்ற பல்கலைக்கழகங்களில் அந்த தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வு நடத்தப்படாத பல்கலைக்கழகங்களில் இருக்கிற, எல்லோருக்கும் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆன்லைனில் தேர்வு எழுதுபவர்கள். அதனால், ஆன்லைனில் தேர்வு எழுதி அதை அனுப்புவது கடினமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கான தேர்வுகள் அரியர்ஸ் மற்றும் இறுதி ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ஜூன் 15ம் தேதி தொடங்கி ஜூலை 15க்குள் அரியர்ஸ் தேர்வுகள் மற்றும் மற்றப் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை 30ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று அனைத்து துணை வேந்தர்களிடம் ஆன்லைனில் பேசியிருக்கிறேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் ஜூலை 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.

ஜூலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தாலும், மற்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஜூலை மாதத்திற்குள் தேர்வுகளை முடித்து தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கான முடிவுகளை உருவாக்கி அறிவித்திருக்கிறோம்.

கொரோனா காலகட்டத்தில் பேராசிரியர்கள் ஊதியம் வழக்கம்போல வாங்கிக்கொண்டிருப்பார்கள். இதற்காக யாரும் ஊதியத்தை குறைப்பதில்லை.” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Madras University Anna University Ponmudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment