Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை; 9 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Anna university invites application for Watchman posts apply soon: அண்ணா பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு; 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
அண்ணா பல்கலை. எஞ்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு: எழுத்துத் தேர்வு உறுதி

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பன்னாட்டு விடுதியில் (International Hostels) காவலர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தினசரி கூலி அடிப்படையில், 6 மாத காலத்திற்கு நிரப்படும். தகுதியுள்ளவர்கள் 23.11.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காவலர் (Watchman)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ.370

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/watch.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி

The Executive Warden, International Hostels, Anna University, Chennai – 600 025.

தகவல்களுக்கு : 044 2235 – 9827 / 9826 Email. Id: annaihhostels@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/watch.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment