அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசுக்கு மே-31 வரை கெடு

அண்ணாப் பல்கலைக்கழகம் மாநில அரசின் கீழ் செயல்படுவதால்,‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’விசயத்தில் தமிழக அரசின் நிதி பங்கீட்டை மாநில அரசு  உறுதிபடுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil nadu news today live

Anna University IoE Status:  இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தை ‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’ பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதுபோல அறிவிக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு வருடத்திற்கு 200 கோடி ரூபாய் வீதம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலுக்குள் இந்த கல்வி நிறுவனங்கள் வர வேண்டும் என்பதற்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.

மேலும், மானியக் குழு தனது அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.2,750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், அதில் ரூ.1,000 கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும், மீதமுள்ள ரூ.1,750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.

சிறப்பு அந்தஸ்தை ஏற்பது குறித்த தனது முடிவினை வரும் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அண்ணாப் பல்கலைக்கழகம் மாநில அரசின் கீழ் செயல்படுவதால்,‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’விசயத்தில் தமிழக அரசின் நிதி பங்கீட்டை மாநில அரசு  உறுதிபடுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா எமினென்ஸ் இன்ஸ்டிடியூட், தனியார் பொறியியல் கல்லூரிகளை இணைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாக பிரிக்கவும், அண்ணா பல்கலைக்கழகம் சட்டம், 1978 திருத்தம் செய்யவும் ஏற்ற பரிந்துரைகளை அளிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. பரிந்துரை குழு இன்னும் தனது அறிக்கையை சமர்பிக்க வில்லை. இதுதொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு 2 முறை தான் கூடியுள்ளது. அதன்பின் ஊரடங்கு காரணமாக ஆலோசனை நடத்தவில்லை.அரசாங்கத்தால் இந்த முடிவை அவசரமாக எடுக்க முடியாது” என்று தெரிவித்தார். மாநில அரசின் 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்பது ஏற்கனவே தெளிவைபடுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் பி. ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.வி. அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anna university ioe status tag may 31 deadline mhrd mhrd request state commitment189635

Next Story
பீ ரெடி கைஸ்! ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரி, பல்கலை., திறப்பு – மத்திய அமைச்சர்corona in india, school and colleges reopen, india news, latest india news, இந்திய செய்திகள், கொரோனா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com