Advertisment

செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 15 நடத்த அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம்

லயோலோ போன்ற உயர்க்கல்வி நிறுவனங்கள் கோவிட்- 19 தனிமைப்படுத்தல் மையமாக செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு வகுப்புகள் தற்போது தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anna university constituent college seat vacancies

ஜூலை 15, ஆகஸ்ட் 1, அகஸ்ட் 15 ஆகிய மூன்று தேதிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த  அண்ணா பல்கலைக்கழகம்  விருப்பம் தெரிவித்துள்ளது.

Advertisment

மெட்ராஸ் பல்கலைக்கழகமும் தனது செமஸ்டர் தேர்வுகளை  ஜூலை 15 (அ) ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டுவருவதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை தமிழக உயர்கல்வி துறை நடத்திய காணொலி கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். இதில்,  செமஸ்டர் தேர்வுகள், மாணவர்கள் சேர்கை, கலந்தாய்வு கூட்டம், வகுப்புகள் துவக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இருப்பினும், லயோலோ போன்ற உயர்க்கல்வி நிறுவனங்கள் கோவிட்- 19 தனிமைப்படுத்தல் மையமாக செயல்பட்டு வருவதால், வகுப்புகள் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை. எனவே, இதுபோன்ற உயர்க்கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் கடந்த மார்ச்- 17 முதல் அடுத்த உத்தரவு வரும் வரை இந்தியாவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மாணவர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெபினார் மூலம் கலந்துரையாடினார். அப்போது, 2020-21 கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை பாடவகுப்புகளுக்கான சேர்க்கை 31-8-2020க்குள் நிறைவுறும் என்று அமைச்சர் தெரிவித்தார். அவசியம் ஏற்பட்டால் தற்காலிகச் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டு தகுதி பெறும் தேர்வு முடிவுக்கான ஆவணங்கள் 30-9-2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும். 2020-21ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டுப் பருவம், பழைய மாணவர்களுக்கு 01.08.2020 அன்றும், புதிய மாணவர்களுக்கு 01.09.2020 அன்றும் தொடங்கும் என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment