Advertisment

அண்ணா பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி, பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

Anna University recruitment 2022 invites application for various posts: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க கவுன்சிலில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022

Advertisment

Technology Commercialization Executive

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 50,000

இதையும் படியுங்கள்: TNPSC; தமிழ்நாடு அரசு வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

Project Associate II

காலியிடங்களின் எண்ணிக்கை - 3

கல்வித் தகுதி : BE/BTech in IT / Computer Science / Software Engineering/ Mechanical / Production /Manufacturing / Industrial / Automobile / Aeronautical/ EEE / ECE / Instrumentation. மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 25,000 – 40,000

Project Assistant – Accounts

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : B.Com படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

Project Assistant – Administration

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : B.A English படித்திருக்க வேண்டும்.

சம்பளம்  : ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/advt_tec.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Coordinator, Technology Enabling Centre , Room no.304, Second Floor, Platinum Jubilee Building, AC Tech Campus, Anna University, Chennai 600025.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.07.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/advt_tec.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment