அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் புரொபஷனல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்
கிளரிக்கல் அசிஸ்டெண்ட் - 1 பணியிடம்
புரொபஷனல் அசிஸ்டெண்ட் - 1 பணியிடம்
கல்வித்தகுதி
கிளரிக்கல் அசிஸ்டெண்ட் - பி.இ., பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
புரொபஷனல் அசிஸ்டெண்ட் - கம்ப்யூட்டர் இயக்கும் திறனுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பளம்
கிளரிக்கல் அசிஸ்டெண்ட் - நாள் ஒன்றுக்கு ரூ.736
புரொபஷனல் அசிஸ்டெண்ட் - நாள் ஒன்றுக்கு ரூ.434
விண்ணப்பிக்கும் முறை : தகுதி வாய்ந்த பட்டதாரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chairman,
Anna University Sports Board,
Anna University
Chennai - 600025.
விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 16, 2019