அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கிண்டிஅண்ணா பல்கலைக்கழகம் தனது 500க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கு, அடுத்த கல்வியாண்டின்  இணைப்பை புதுப்பிப்பதற்கான  விண்ணபங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு, உயரக்கல்வியில் சிறந்து விளங்கும் 20 கல்வி  நிறுவனங்களை ‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்டாக’ அறிவித்தது. ஆண்டிற்கு 200 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் இந்த வகையான கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் முதல் 500 கல்வி நிறுவனங்களில் இந்த தேர்ந்தேடுக்கப் பட்ட கல்வி நிறுவனங்கள்  வர வேண்டும் என்பது இந்த எமினென்ஸ் இன்ஸ்டிடியூட் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தை இந்த ‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’ பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தை இந்த ‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’ பட்டியலில் சேர்க்கப்பட்டால், அது தனி நிறுவனமாக செயல்பட தொடங்கிவிடும் என்றும், அதனால்  அதன் கீழ் இயங்கி வரும் 500க்கும் மேற்பட்ட இணைப்பு தனியார் பொறியியல் கல்லூரிகளை இழக்கும் நிலை உருவாகும் என்று கூறப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைகழகத்திற்கு மாற்றாக ஒரு  புதிய தொழிநுட்ப பல்கலைகழகத்தை உருவாக்கவும் மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், கிண்டிஅண்ணா பல்கலைக்கழகம் தனது 500க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கு, அடுத்த கல்வியாண்டின்  இணைப்பை புதுப்பிப்பதற்கான  விண்ணபங்களை வெளியிட்டுள்ளது.

 

முன்னதாக, அண்ணா பல்கலைகழகத்தை எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்டாக அறிவிக்கப்பட்டால், நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீடு பாதிப்புக்கு உள்ளாகும் என்று பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில், இது குறித்து ஆலோசனை நடைபெற்றது. முடிவில், நிச்சயமாக 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எதனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  ‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’ நிலை தள்ளிப் போகிறது என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை . அண்ணா பலகலைகழகத்தில், மாநில அரசு மட்டும்  50 சதவீத நிதியை பல்கலைக்கழக சீரமைப்பிற்காக செலவிட வேண்டும் என்ற மத்திய அரசின் முரண்பாடனா கோரிக்கையும், இந்த தாமதத்திற்கு காரணமாகஇருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close