Advertisment

BHEL Jobs; பெல் நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

பெல் நிறுவனத்தில் டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 30 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
BHEL Jobs; பெல் நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) நிறுவனத்தில், திட்டப்பொறியாளர், திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: SBI CBO 2022; பட்டப்படிப்பு தகுதி; எஸ்.பி.ஐ-ல் 1,422 சர்க்கிள் ஆபிசர் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

Project Engineers

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி: BE/B. Tech in Mechanical/ Electrical/ Electronics படித்திருக்க வேண்டும்

சம்பளம்; ரூ. 78,000

Project Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி : Diploma in Mechanical/ Electrical/ Electronics/Instrumentation படித்திருக்க வேண்டும்.

சம்பளம்; ரூ. 43,550

வயது தகுதி: 01.11.2022 அன்று 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://edn.bhel.com or https://careers.bhel.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை பதிவு செய்த பின்னர், பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: AGM (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P. B. No. 2606, Mysore Road, Bengaluru-560026.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2022

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200, இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://edn.bhel.com/images/stories/recruit/FTA_Advertisement_2022.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment