Advertisment

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் இப்படி தான் இருக்கப் போகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Plus One Result 2019, TN 11th Result 2019, TN +1 Result 2019

11ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத் தாளில் “சரியான விடையை தேர்ந்தெடுக (Multiple choice questions)” கேள்விகளே இடம்பெற்றிருக்கும் என்றும், “கோடிட்ட இடத்தை நிரப்புக (fill in the blanks)” கேள்விகள் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

+1 மற்றும் +2 பொதுத் தேர்வு இன்னும் 10 நாட்களில் தொடங்க இருக்கிறது. இரண்டு வகுப்புகளிலும் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத இருக்கிறார்கள்.

பொதுத்தேர்வு வினாத்தாள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வுத்துறை வெளியிட்ட மாதிரி வினாத் தாளில், சரியான விடையை தேர்தெடுக, கோடிட்ட இடங்களை நிரப்பிடுக மற்றும் சரியான விடையுடன் பொருத்துக ஆகிய கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்ய்க்கு அதிர்ச்சியளிக்கு வகையில், இந்த வடிவமைப்பு (choose the correct answer, fill in the blanks and match the correct answer) கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களின் பாகம் ஏ வினாத்தாளில் மட்டும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்களிடையே குழப்பம் நீடித்தது. ஆசிரியர்களும், திடீரென இப்படி ஒரு மாற்றம் கொண்டு வந்தால் மாணவர்களுக்கு எப்படி பயிற்சியளிப்பது என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில்,  11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு வினாத்தாளும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதாவது, இந்த பொதுத்தேர்வு வினாத்தாளில், கேட்கப்படும் அனைத்து குறிக்கோள் வினாக்களுக்கும் (Objective Type) 4 மாற்று விடைகள் வழங்கப்படும். அதேபோல், கோடிட்ட இடங்களை நிரப்புதலிலும், 4 மாற்று விடைகள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.

பொருத்துக (Match the Following) பகுதிக்கும் 4 மாற்று விடைகள் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து வினாக்களுக்கும் விடையை தேர்ந்தெடுக்கும் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு, மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாதிரி வினாத்தாளிற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment