Advertisment

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள்; 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவு

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022: 12 ஆம் வகுப்பில், 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்தது; அதேநேரம் 10 ஆம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

author-image
WebDesk
New Update
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள்; 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவு

Sukrita Baruah 

Advertisment

In CBSE exams after pandemic, drop in Class 10, 12 pass percentage: கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2021 ஆண்டின் சாதனை தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு நேரடி வாரியத் தேர்வுகளின் காரணமாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடிவுகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விழுக்காடு சரிவைச் சந்தித்தன.

பன்னிரண்டாம் வகுப்பில், குறைவான மாணவர்களே 90 சதவீதத்திற்கும் 95 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், இருப்பினும் பத்தாம் வகுப்பிற்கு அதே எண்ணிக்கை அதிகரித்தது.

இதையும் படியுங்கள்: சிபிஎஸ்இ +2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இப்படி செக் பண்ணுங்க!

ஒட்டுமொத்தமாக, 33,432 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அல்லது அனைத்து மாணவர்களில் 2.33 சதவீதம் பேர் இந்த ஆண்டு 95 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 70,004 மாணவர்கள் அல்லது அனைத்து மாணவர்களில் 5.73 சதவிகிதம் 95 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றனர். இதேபோல், 1,34,797 மாணவர்கள் அல்லது அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களில் 9.39 சதவீதம் பேர் இந்த ஆண்டு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 1,50,152 மாணவர்கள் அல்லது 11.51 சதவீத மாணவர்களை விட குறைந்துள்ளது.

publive-image

92.71 சதவீதம் என, நாடு தழுவிய பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டு 99.37 சதவீதத்தை விட கணிசமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை விட அதிகமாக உள்ளது: 2020 இல் 88.78 சதவீதம் மற்றும் 2019 இல் 83.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

2021 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் காரணமாக சி.பி.எஸ்.இ வாரியம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இரண்டிற்கும் தேர்வுகளை நடத்தவில்லை. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் இறுதி முடிவுகள், பள்ளிகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் உள் தேர்வுகள், வாரிய உள் மதிப்பீடு மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளி அளவில் சிக்கலான கணக்கீட்டு செயல்முறை மூலம் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் கணக்கிடப்பட்டன. இது பள்ளி மட்டத்தில் ஒரு மிதமான செயல்முறையுடன் இணைக்கப்பட்டது.

இருப்பினும், இந்த ஆண்டு, வாரியம் வேறுபட்ட அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. இது இரண்டு ஆண்டுகளுக்கான பாடத்திட்டத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு பருவங்களின் முடிவில் இரண்டு வாரியத் தேர்வுகளை நடத்தியது, ஒவ்வொரு தேர்வும் பாதி அளவிலான பாடத்திட்டத்திற்கு நடத்தப்பட்டது. தியரி மதிப்பெண்களில் முதல் பருவத் தேர்வுக்கு 30 சதவீத வெயிட்டேஜும், 2வது பருவத் தேர்வுக்கு 70 சதவீத வெயிட்டேஜும், இரண்டு பருவ ப்ராக்டிகல் மதிப்பெண்களுக்கு சம வெயிட்டேஜும் வழங்கி இறுதி முடிவுகள் அட்டவணைப்படுத்தப்பட்டன.

publive-image

இந்த இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு அணுகுமுறைகள், வெவ்வேறு சூழ்நிலைகள் ஆகியவை வெவ்வேறு முடிவுகளாக வெளிப்படுகின்றன.

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கேட்டபோது, “2 ஆம் பருவத் தேர்வுகள் உண்மையான வாரியத் தேர்வுகள். 2022க்கும் 2021க்கும் இடையில் உண்மையில் எந்த ஒப்பீடும் இல்லை. கடந்த ஆண்டு, பள்ளிகளின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவுகளை அட்டவணைப்படுத்தினோம். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு நல்ல வினாத்தாளை எவ்வாறு தயாரிப்பது என்று தெரியாது, ”என்று சி.பி.எஸ்.இ.,யின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.

“நிலைமை வேறு, மதிப்பீட்டு முறை வேறு. கடந்த ஆண்டு, நாங்கள் ஆஃப்லைனில் இருந்து ஆன்லைனுக்கு மாறுவதற்கான கற்றல் கட்டத்தில் இருந்தபோதும் சூழ்நிலைகள் இருந்தபோதிலும் முடிவுகள் உருவாக்கப்பட்டன. இதுபோன்ற செயல்முறைகள் நடைமுறையில் இல்லை. இந்த முறை இது முறையாக இருந்தது, கடந்த ஆண்டு பாதி முதல் மாணவர்களுக்கு உண்மையான ஆஃப்லைன் கற்பித்தல் நேரம் பள்ளிகளுக்கு கிடைத்தது” என்று டெல்லியின் மவுண்ட் அபு பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜோதி அரோரா கூறினார்.

publive-image

இந்த வேறுபாடுகள் பத்தாம் வகுப்பு முடிவுகளில் வித்தியாசமான முறையில் பிரதிபலிக்கின்றன. பத்தாம் வகுப்புக்கும், நாடு தழுவிய தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டு 99.04 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 94.4 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், அதிகமான மாணவர்கள் 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 3.10 சதவீதம் பேர் (64,908) 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 2.76 சதவீதம் பேர் (57,824) 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றனர். இதேபோல், 2,36,993 மாணவர்கள், அதாவது 11.32 சதவீதம் பேர், இந்த ஆண்டு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 2,00,962 பேரை (9.58 சதவீதம்) விட அதிகமாகும்.

முந்தைய ஆண்டுகளில், சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள், கட்-ஆஃப் முறையின் காரணமாக டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர்க்கையை நிர்ணயித்தது. பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) ஏற்றுக்கொண்டதன் மூலம், டெல்லி பல்கலைக்கழகத்திற்கான சேர்க்கையில் சி.பி.எஸ்.இ முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், நாட்டில் உள்ள பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள், பன்னிரண்டாம் வகுப்பின் செயல்திறன் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்.

இந்த ஆண்டு, 24 லட்சம் மாணவர்களில், 6.35 லட்சம் பேர், 12ம் வகுப்பில், 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த 6 லட்சம் மாணவர்களுக்கு, பழைய சேர்க்கை நடைமுறையின்படி, விரும்பப்படும் கல்லூரி அல்லது ஒரு மத்திய பல்கலைக்கழக படிப்பில் கிடைக்காது. CUET தேர்வு அறிமுகம் காரணமாக, அவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbse Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment