Neeti Nigam
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு வாரியத் தேர்வில் முதலிடம் பிடித்த திவ்யான்ஷி ஜெயின், நல்ல மதிப்பெண்கள் வரும் என்று அறிந்திருந்தாலும், 600க்கு 600 என்ற இமாலய மதிப்பெண்ணை நினைக்க வில்லை என்று தெரிவிகின்றனர். 90 மதிப்பெண் கூட எட்டாக் கனியாக இருக்கும் ஆங்கிலம் பாடத்திலும் ஜெயினுக்கு 100 மதிப்பெண் கிடைத்தது. சி.பிஎஸ்.இ வாரியத் தேர்வில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள், சமூக அறிவியல், மானுடவியல் பிரிவில் படிக்கும் மாணவிகள் தான் முதலிடம் பிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக, அறிவியல், வணிகவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில வாரியத் தேர்வுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கணிதம் வராத மாணவர்களுக்கு மட்டும் தான் கலைகள் பிரிவு சிறந்ததாக கருதப்பட்டது. ஆனால், சூழல் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், உளவியல் மாணவர்கள் தற்போது 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர்.
இந்த வளர்ச்சிக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
சிபிஎஸ்இ அறிமுகப்படுத்திய புதிய மதிப்பெண் திட்டத்தால் இப்போது எந்தவொரு பாடத்திலும் 100 மதிப்பெண்கள் பெறுவது சாத்தியம் என்று டி.பி.எஸ் இந்திராபுரத்தின் முதல்வர் சங்கீதா ஹஜேலா விளக்குகிறார். "உளவியல், வரலாறு, சமூகவியல் போன்ற பாடங்களில் நடைமுறை/ப்ராஜெக்ட் அறிமுகப்படுத்துவதன் மூலம், மாணவர்கள் கோட்பாடு/ நடைமுறைக் கல்வி இரண்டிலும் தங்கள் அறிவைக் காட்ட வாய்ப்பு கிடைத்தது. இன்டர்னல் மதிப்பெண்கள் தற்போது 30:70 (அ) 20:80 என்ற அளவில் உள்ளது. அதனால்தான், மானுடவியல், கலைப் பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களால சிறப்பாக மதிப்பெண் பெற முடிகிறது, ”என்று தெரிவித்தார்.
மொழிப் பாடங்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த ஒரு பழமைவாத சிந்தனை நம்மிடம் இருந்தது. உதாரணமாக, கணிதம், இயற்பியல் பாடங்களில் பயன்படுத்தப்படும் பார்முலாக்கள் நன்கு வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆங்கிலம் போன்ற பிற மொழிப் பாடங்கள் எத்தகைய பதிலும் முழுமையடையாது. எத்தகைய பதிலும் ஆக்கமான முன்னேற்றங்களை ஒருவரால் காண முடியும் என்றும் சங்கீதா ஹஜேலா தெரிவித்தார்.
இருப்பினும், புதிய மதிப்பெண் திட்டம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் டாப்பர்கள் மொழிப் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 2017ம் ஆண்டு சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் முதலிடம் பெற்ற ரக்ஷா கோபால் ஆங்கிலத்தில் 100/100 மதிப்பெண்களை பெற்றார். மேக்னா ஸ்ரீவாஸ்தவா (2018 முதலிடம்), ஹன்சிகா சுக்லா (2019) தலா 99 மதிப்பெண்களை பெற்றனர். இந்த ஆண்டின் அதிக மதிப்பெண் பெற்ற திவ்யான்ஷிக்கும் ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்தது.
மூத்த கல்வியாளர் ஷயாமா சோனா இதுகுறித்து கூறுகையில்,"40 ஆண்டுகால பணி வாழ்க்கையில், கலைப் பிரிவில் இதுபோன்ற முடிவுகளை பார்த்ததில்லை," என்று தெரிவித்தார். கல்வியில் சிறந்த மாணவர்கள் தற்போது மானுடவியல் பிரிவை தேர்ந்தெடுக்கின்றனர். இது, ஆட்டத்தின் போக்கையே மாற்றி வருகிறது. " ஆனால் STEAM பற்றிய விழிப்புணர்வு- (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணித அறிவியல்) மாணவர்களிடத்தில் அதிகம் உள்ளது. மருத்துவமா? வணிகமா? கலையா? என்ற கேள்வி தற்போது இல்லை. அனைத்து பிரிவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது,”என்று குறிப்பிட்டார்.
பெரும்பாலான கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையாகக் கொண்டு தான் நடைபெறுகிறது. எனவே வணிகவியல், கலைப் பிரிவு மாணவர்கள் வாரியத் தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவதில் கவனம் செலுத்துகின்றனர். உயர்ப் படிப்புகளில் மானுடவியல் (Humanities) மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான மருத்துவம் / பொறியியல் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் கவனம் செலுத்துவதால், வாரியத் தேர்வு மதிப்பெண்களுக்கு முன்னிரிமைக் கொடுப்பதில்லை, ”என்று ஹஜேலா சுட்டிக்காட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.