சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் நடைபெற இருக்கிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க, வாரியத் தேர்வுகளை மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளிலேயே எழுதிக் கொள்ளலாம் என்றும் சி.பி.எஸ்.இ தெரிவித்தது.
இருப்பினும், கொரோனா பொது முடக்கநிலையால் மாணவர்கள் பல்வேறு இடங்களில் சிக்கிக் தவிக்கும் சூழலில் இருக்கின்றனர். மேலும், நோய்க் கட்டுபாட்டு மண்டலங்களில் தேர்வு மையங்களுக்கு அனுமதி கிடையாது என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் கூறியிருந்தது. இதனால், தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் சற்று குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில், மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் 10, 12 வாரியத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் காணொளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர்," கொரோன பொது முடக்கத்தால் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தங்கள் இருப்பிடம் தொடர்பான தகவலை தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள் குறித்த தகவல் ஜூன் முதல் வாரத்திற்குள் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' இன்று மாலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார்.
10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வடகிழக்கு டெல்லி உள்பட நாடு முழுக்க நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ முன்னதாக அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil