அல்கா கபூர்
சி.பி.எஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ ஆகியவை 10ம் மற்றும் 12-ம்வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டிருக்கின்றன. இதனால், தேர்வுகளுக்குத் தயாராவது குறித்த மன கவலை மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இறுதித் தேர்வுகளை நன்றாக எழுத, முக்கியத்துவம் வாய்ந்த மறுவாசிப்பு நேரங்களை தூக்கமின்றி கழிப்பதை விடவும், தேர்வுக்கு தயாராவதற்கு உரிய நல்ல மனதைக் கொண்டிருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
மாணவர்கள் பீதியடையாமல் தேர்வுகள் குறித்த அச்சத்தைப் போக்கி, அவர்களை தேர்வுகளுக்குத் தயார் படுத்தும் பத்து குறிப்புகள்
மறுவாசிப்புக்கு முன்கூட்டியே திட்டமிடுதல்; 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்கள் தேர்வுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே, மாணவர்கள் தீவிரமான மறுவாசிப்பை தொடங்கவேண்டும். கணித கோட்பாடு, சிக்கலான கணக்குகள் அல்லது வேதியியலில் வேதியியல் ஃபார்முலாவை புரிந்து கொள்ளுதல், வரலாற்று புரட்சிகள் மற்றும் தலைவர்கள், என இந்தப் பாடங்கள் மாணவர்கள் மனதில் நெருக்கத்தை உருவாக்குகினாலும், உருவாக்காவிட்டாலும் இந்தப் பாடங்களில் சிறப்பான மறுவாசிப்பு என்பது சரியான மருந்தாக இருக்கும். இன்னும் தொட்டுக்கூடப்பார்க்காத பாடங்களைப் புதிதாகப் படிப்பதை விடவும், இருக்கும் நேரத்தில் ஏற்கனவே படித்த பாடங்களை, பகுதிகளை மீண்டும் படிப்பது நல்லதாக இருக்கும். மறு வாசிப்பு என்பது மாணவர்களுக்குள் இருக்கும் சந்தேகங்கள், குழப்பங்களை தீர்ப்பதாக இருக்கும்.
CBSE handbook : ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபர கையேடு - சிபிஎஸ்இ வெளியீடு
பலன் அளிக்கும் அட்டவணையை திட்டமிடுதல்; தேர்வுக்கு தயாராகும்போது மாணவர்கள் பலன் அளிக்கக் கூடிய அட்டவணையை தயாரிக்க வேண்டும். குறைவான நேரத்தில் அதிக பலன்களை அறுவடை செய்வதாக இருக்க வேண்டும். இன்றைக்கு தங்களது நேரத்தை சிறப்பாக செலவிடுபவர்கள், நாளைய சாம்பியன்களாக இருப்பார்கள். அட்டவணை தயாரிக்கும்போது, கடினமாக இருக்கும், சிக்கலாக இருக்கும்பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். அதே நேரத்தில் எளிமையான பாடங்கள் , தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முக்கியமான பங்கு வகிக்கும் என்பதால் அதற்கும் உரிய நேரம் ஒதுக்க வண்டும். தவிர அந்த அட்டவணையோடு ஒன்றி தீவிரமாக படிக்க வேண்டும். குறுகிய காலத்தில் முழு பாடங்களையும் மறுவாசிப்பு செய்வதற்கு இந்த முறையான அணுகுமுறை உதவியாக இருக்கும்.
CBSE Board Practical Exam 2020 : 10,12 வகுப்பு பிராக்டிக்கல் தேர்வு தேதியை வெளியிட்டது சிபிஎஸ்இ
தினசரிபடிப்பில் அனைத்துப் பாடங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்; ஒரே பாடத்தை நீண்ட நேரத்துக்குப் படித்துக் கொண்டிருப்பது மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அதற்கு பதில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒருவரின் மதிப்பெண் பட்டியலில் விளைவை ஏற்படுத்தக் கூடியவை என்ற வகையில் அனைத்துப் பாடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். பின் தங்கியிருக்கும் பாடங்களுக்கு கூடுதல் நேரம் செலவிட வேண்டும். அதே நேரத்தில் இதர பாடங்களை புறக்கணிக்கக் கூடாது. அவற்றையும் முறையாக, அக்கறையாக மறுபடி படிக்க வேண்டும்.
குறிப்புகள் தயாரித்தல்; படிக்கும்போது குறிப்புகள் தயாரித்தல், மாணவர்களுக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும். இறுதிக்கட்ட படிப்பின்போது இது அவர்களுக்கு உதவக் கூடியதாகும். தேர்வுக்கு முதல் நாள் கடைசி நேர திருப்புதலுக்கும் இது உதவும். மேலும், பல்வேறு நீளமான ஃபார்முலாக்கள், சமன்பாடுகளை நினைவுப்படுத்திக் கொள்வதற்கு சுருக்கெழுத்துகளை உருவாக்க வேண்டும்.
நண்பர்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல், அவர்களுடன் உரையாடுதல்; இதனை ஒரு எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும். ஒரு பாடத்தை நடைமுறை ரீதியாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்வதற்கு நேர்மையாக, தீவிரமாக குழுவாக படிப்பது எப்போதுமே பரிந்துரைக்கப்படுகிறது. வெறுமனே கூடிப்படிப்பது ஒருவரின் படிப்புக்கு இடையூறாக இருக்கும்.
முந்தைய ஆண்டின் கேள்வித்தாள்களை பயிற்சிசெய்தல்; ஒரு பாடத்தின் மீது புரிதல் அல்லது நல்ல தெளிவு ஏற்பட, ஒரு மாணவர் கடந்த சில ஆண்டுகளாக வெளியான கேள்வி தாள்களில் இருக்கும் கேள்விகளுக்கான விடைகளை எழுதிப் பார்க்க சில மணி நேரத்தை செலவிட வேண்டும். இந்த பயிற்சியானது, கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அதிக கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் மாணவர்களுக்கு பயன் அளிக்கும்.
சீரான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்; தேர்வின் போதும், தேர்வுக்கு முன்பாகவும் மாணவர்கள் சீரான உணவை உட்கொள்ள வேண்டும். கார்ப்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நுண்ணூட்ட சத்துகள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட ஐந்து தேவையான சத்துகள் நிறைந்த உணவாக , உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சுறுசுறுப்பாக வாழ்வதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வு தேவை; தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் படிப்பது என்பது உடலையும், மனதையும்பாதிக்கக் கூடும். நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது கழுத்து, தோள்பட்டை, பின் முதுகு ஆகியவை பாதிக்கப்படும். பாடப்புத்தகங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவது கண்களில் சோர்வை ஏற்படுத்தும். உட்கார்ந்தபடியே இருக்கும்போது ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒரு முறை பத்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வது, சலிப்பு இல்லாமல், உடல் மென்தன்மையோடும் இருக்கும்.
நன்றாக உறங்குங்கள்; ஆறு முதல் ஏழுமணி நேரம் ஆழ்ந்த உறக்கம் என்பது உடலுக்கும் அதே போல மனதுக்கும் தேவையான ஒன்றாகும். வசதியான,அமைதியான சூழலில் உறங்க முயற்சிக்க வேண்டும்.
சாதகமான எண்ணங்களுடன் இருத்தல்; சாதகமான எண்ணங்களைக் கொண்ட மனதை தொடர்ச்சியாக தக்கவைக்க வேண்டியது அவசியம். தேர்வு மையத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே செல்லுங்கள். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க, உங்கள் மனதில் சாதகமான எண்ணங்களைக் கொண்டு நிரப்புங்கள். ஒரு சாதகமான மனம் என்பது ஒரு நல்ல தொடக்கத்துக்கும், பெரிதான முடிவுக்கும் ஏற்றதாகும்.
-கட்டுரையை எழுதியவர், ஷாலிமர் பக்கில் உள்ள மார்டன் பப்ளிக் பள்ளியின் முதல்வராவார்.
தமிழில் கே.பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.