மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை நாளை - பிப்ரவரி 26 ஆம் தேதி நடத்த உள்ளது. 18.89 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கிலத் தாள் தேர்வை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நேரம், தேர்வர்கள் தங்கள் பாடத்தை படித்து முடித்திருப்பார்கள். தற்போது ரிவைஸ் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், கடைசி நிமிட ரிவிஷனில் எது முக்கியமானது, எதை மீண்டும் படிக்க வேண்டும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் பேஸ்புக் வீடியோ பக்கத்தையும்தேர்வர்கள் பார்க்கலாம். அதில், ஆர்மி பப்ளிக் பள்ளியின் ஆசிரியர் இந்திராணி நியோகி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில தாளை எவ்வாறு ப்ரிப்பேர் செய்வது குறித்த உதவிக்குறிப்புகளை வழங்குகிறார்.
மாதிரி கேள்வித் தாள்கள்: ஜெனிசிஸ் குளோபல் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் அபிஷேக் சர்மா கூறுகையில், "ஆங்கிலத்தில் இலக்கியம் மட்டுமே அறியப்பட்ட பிரிவு என்பதால், இலக்கிய புத்தகங்கள் வழியாக செல்ல வேண்டியது அவசியம். சிறந்த ஆலோசனையானது மாதிரி கேள்வித் தாள்களை பயிற்சி செய்வது தான். இருப்பினும், பாடத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டதால், மாணவர்கள் பொருத்தமான மாதிரி கேள்வித் தாள்களை மட்டுமே குறிப்பிடுவது மிகவும் முக்கியம். சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவும் மாதிரி கேள்வித் தாள்களை வழங்குகிறது. ”
“Formats” களில் குழப்பமடையக்கூடாது. இதில் தான் மாணவர்கள் மதிப்பெண்களை இழக்கிறார்கள். இவ்வாறு, அனைத்து வடிவங்களின் எழுத்துப்பூர்வ பயிற்சியையும் செய்யுங்கள். ஒரு மாணவருக்கு சரியான Format இருந்தால், அவர்களுக்கு சில மதிப்பெண்கள் கூட வழங்கப்படும். மற்றொன்று செய்ய வேண்டியது என்னவெனில், அனைத்து கவிதை மற்றும் கவிஞர்களின் பெயர்களையும் கற்றுக்கொள்வது. இவை நல்ல ஒரு மதிப்பெண் கேள்விகளை உருவாக்கலாம்" என்றார்.
முக்கிய வார்த்தைகள்: வித்யாகியன் பள்ளியின் கீதா கோக்ரான் கூறுகையில், "மாணவர்கள் பெரும்பாலும் கடைசி நிமிடத்தில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். முழு அத்தியாயத்தையும் முழுமையாகப் படிப்பது புத்திசாலித்தனம். இந்த வழியில் ஒருவர் முக்கிய keywords-ல் அதிக கவனம் செலுத்த முடியும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இது தொடர்பான தீம் சொல் உள்ளது, அவை முக்கிய வார்த்தைகள் என்று அழைக்கப்படுகின்றன. தேர்வில் இந்த முக்கிய வார்த்தைகளை குறிப்பிடுவதும் அவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுவதும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியும்.
வாசிப்பு நேரம்: "தேர்வு உண்மையில் மூன்று மணி நேரம் 15 நிமிடங்கள். மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்களை வாசிப்பு நேரமாக பயன்படுத்த வேண்டும். இந்த 15 நிமிடங்களில் அவர்கள் பகுதியை A-வை விரைவாக தீர்க்க முடிந்தால், நிறைய நேரத்தை சேமிக்க முடியும்.
எழுதுவதற்கு முன் ஒழுங்கமைக்கவும்: “பரீட்சை எழுதும் போது, காகிதத்தை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கவும். வாக்கியங்களை எளிமையாக வைத்திருப்பதை உறுதிசெய்து, எழுத்துப்பிழைகள் செய்ய வேண்டாம். Overwriting செய்யாமல் எழுதினால், ஒரு விடைத்தாளுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கத் தோன்றும். மாணவர்கள் முதலில் அசல் பதிலைஎழுதுவதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு ஒரு பதிலை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.
“மேலும், சொல் வரம்பைக் கடைப்பிடிக்கவும். கேட்கப்பட்டதை விட அதிகமாக எழுத வேண்டாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.