மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஊரடங்கால் வேறு மாவட்டம்/ மாநிலத்துக்கு இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிபிஎஸ்இ பொது தேர்வு எழுத சிறப்புத் தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும், இடம்பெயர்ந்த மாணவர்கள், தேர்வு மையத்தை தங்கள் பள்ளியின் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்தது.
மேலும், ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறும் CBSE பொதுத்தேர்வை, மாற்றுத் திறனாளி மாணவர்களால் எழுத முடியாமல் போனால், அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று சி பி எஸ் இ தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. பெருந்தொற்று பொது முடக்கநிலை காரணமாக 12ம் வகுப்புகளுக்கு முக்கியமான 29 படங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்த வரை, குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு கலவரம் காரணமாக பரீட்சைக்கு வரமுடியாத வடகிழக்கு டெல்லி மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும்.
CBSE has today issued important information for the remaining Class X and XII exams to be held in July. Details can be seen at the link below https://t.co/gSXQOFpU7X@DrRPNishank @HRDMinistry @PIB_India @DDNewslive @AkashvaniAIR @OfficeOfSDhotre @PTI_News
— CBSE HQ (@cbseindia29) June 2, 2020
சி.பி.எஸ்.இ இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில்,"சிறப்புத் தேர்வு மையம் அமைப்பது குறித்த கோரிக்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டுமே எழுப்ப வேண்டும். எந்த மாவட்டத்தில் மாணவர்கள் தேர்வை எழுத தயாராக உள்ளனர் என்ற தகவலை பெறுவது அந்தந்த பள்ளிகளின் பொறுப்பாகும். சிபிஎஸ்இ இணையதளத்தில் உள்ள e-परीक्षा போர்டலை பயன்படுத்தி பள்ளிகள் சிறப்பு தேர்வு மையங்கள் குறிந்த கோரிக்கைகளை சமர்பிக்க வேண்டும். மற்ற வடிவில் வரும் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும். வேறு மாவட்டங்களில் சிறப்புத் தேர்வு மையம் குறித்த தகவலை பள்ளிகளுக்கு தெரிவிப்பது அந்தந்த மாணவர்களின் கடமையாகும்.
சிபிஎஸ்இ பள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் மானவர்கள் இருந்தால்( திருப்பத்தூரில் சிபிஎஸ்இ பள்ளிகள் கிடையாது) பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்"என்று தெரிவிக்கப்பட்டது.
நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தேர்வு மையங்களுக்கு அனுமதி கிடையாது என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றது. எனவே,அந்த பகுதியில் உள்ள மாணவவர்களுக்கு வேறு பகுதியில் தேர்வு மையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.