Advertisment

பெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு

CBSE Merit Scholarship Scheme: கிராமப்புரத்திலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களின் சமூகநிலையை புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn ssl public exam

tn ssl public exam

அதிக ஜனத்தொகை, பெண்கள் கல்வி இந்த இரண்டுக்கான திட்டமிடலும் ஒரு நாட்டில் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். பெண் கல்வி அதிகம் கொண்ட நாட்டால் ஜனத்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஜனத் தொகை அதிகம் உள்ள நாட்டால் பெண்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க முடியாது. இந்த இரண்டு கண்னோட்டத்திலும் தான் சிபிஎஸ்சி யின் ஒற்றை குழந்தை கல்வி உதவித்தொகை திட்டத்தை நம்மால் பார்க்க முடிகிறது.

Advertisment

ஒற்றை குழந்தையாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை சிபிஎஸ்சி வரவேற்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 18 அக்டோபர் 2019 ஆகும்.

திட்டத்தின் நோக்கம்: 

ஒரு வீட்டில் ஒரே குழந்தைகளாக இருக்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்த பெண் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவிப்பதற்காக சிபிஎஸ்சி இந்த திட்டத்தை நடைமுறை படுத்திவருகிறது.

யாரெல்லாம் தகுதியுடையவர்கள்: பத்தாம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை கடந்திருக்க வேண்டும், மேலும் 11 மற்றும் 12 சிபிஎஸ்சி சார்ந்த பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.  வீட்டில் இவர்கள் ஒரே குழந்தையாக இருக்க வேண்டும் (ட்வின்ஸ் ஒரே குழந்தையாகவே கருதப்படுவர்).   இந்திய நாட்டினராக இருத்தல் வேண்டும்.

உதவித் தொகை எவ்வளவு: 

மாதம் ரூ. 500. இந்த கல்வி உதவித்தொகை  XI/ XII என இரண்டு வருடங்களுக்கு கொடுக்கப்படும்.  பதினோராம் வகுப்பு முடிந்ததும் புதிப்பிக்கப் படும் . அப்போது, மாணவர்களின் ஒழுங்குமுறை , மதிப்பெண் போன்றவைகள் கணக்கில் கொள்ளப்படும். கிராமப்புரத்திலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த கல்வித் தொகை சிறியதாய் இருந்தாலும், அவர்களின் சமூக நிலையை சிபிஎஸ்சி புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறது என்றே சொல்லலாம்.

எப்படி விண்ணப்பிப்பது: 

CBSE Merit Scholarship for Single Girl Child என்ற இந்த இணைய தளத்திற்கு சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்து  ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்யத் தொடங்க வேண்டும்.  கேட்கப்பட்டுள்ள எல்லா தகவல்களையும் பாத்திரமாய் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை நிறைவு செய்யுங்கள்.

ஏதேனும் வினவல் இருந்தால், நீங்கள் scholar.cbse@nic.in  என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் சந்தேங்கங்களை எழுதலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment