Advertisment

சிடெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு, செக் செய்வது எப்படி ?

ஆன்சர் கீ-ல் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தவறாக உள்ளது என்று உங்களுக்கு தோன்றினால், நீங்கள் அக்கேள்விக்கு ரூ.1000 பணம் கட்டி சவால் விடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ctet.nic.in 2019, ctet official answer key, ctet official answer key dec, ctet official answer key dec 2019,

ctet.nic.in 2019, ctet official answer key, ctet official answer key dec, ctet official answer key dec 2019,

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான ஆன்சர் கீ-ஐ மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டது. கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி நடைபெற்ற இந்த தகுதி தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள், அதன் அதிகாரப்பூர்வ ctet.nic.in  என்ற வலைதளத்திலிருந்து ஆன்சர் கீ-ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

publive-image

சிபிஎஸ்இ வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில்,  ஆன்சர் கீ  உடன், தேர்வர்கள் எழுதிய ஆன்சர் சீட் ஸ்கேன் செய்யப்பட்ட நகலையும் இந்த  வலைதளத்திலிருந்து  தேர்வர்கள் வரும் 23-12-2019 முதல் 25-12-2019(till 11.59 PM) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.

இதில், இன்னும் குறிப்பிடப்படவேண்டிய செய்தி என்னவென்றால், சிபிஎஸ்இ வெளியிட்டுள ஆன்சர் கீ-ஐ தேர்வர்கள் சவால் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுளது. எதேனும் ஒரு கேள்விக்கு பதில் தவறாக உள்ளது என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் அக்கேள்விக்கு ரூ.1000 முன்பணம் கட்டி சவால் விடலாம்.

உங்களின் சவால் ஏற்றுக்கொல்லப்பட்டால் ( பதில்கள் தவறாக உள்ளது என்பது கண்டறியப்பட்டால் ), இந்த 1000 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்படும். இல்லையேல் தரப்படமாட்டாது.

TNPSC Annual Planner 2020: புத்தாண்டில் தமிழக அரசு வேலை வாய்ப்பு பட்டியல்

தேர்வர்கள் ஆன்சர் கீ- ஐ  23-12-2019 முதல் 25-12-2019(till 11.59 PM)  சவால் செய்ய வேண்டும்.  இதற்கும், அதன் அதிகாரப்பூர்வ ctet.nic.in  என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.

வலைத்தளங்கள் வழியாக எவ்வாறு சரிபார்க்கலாம்

ஸ்டேப் 1: cbse.nic.in, ctet.nic.in என்ற வலைத்தளத்திற்கு செல்லுங்கள்

படி 2: ஆன்சர் கீ-ஐ பதிவிறக்க  இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்

ஸ்டேப் 3: பதில் விசைகளுடன் ஒரு பி.டி.எஃப் கோப்பு தோன்றும்

ஸ்டேப்  4: அதைப் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

 

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment