Advertisment

CBSE Class 9, 11 Admission Rules: சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு, வரிசை கட்டும் அட்மிஷன் சிக்கல்கள்!

Admission Rules for Class 9th and 11th: ஏன் இடமாற்றத்தை சில பெற்றோர் செய்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு நம் குழந்தையின் கல்வி பதிலாய் இருக்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cbse, , cbse class 9 admissions, , cbse class 11 admissions, cbse.nic.in, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாறினால்,சிபிஎஸ்இபெற்றோர்கள், cbse.nic.in

cbse, , cbse class 9 admissions, , cbse class 11 admissions, cbse.nic.in, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாறினால்,சிபிஎஸ்இபெற்றோர்கள், cbse.nic.in

CBSE Changed Rules for Class 9,11 Admission: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளின் சேருவதற்கான விதிகளை மாற்றி அமைத்திருக்கின்றது . இந்த புதிய விதிகளின் கீழ் மற்ற மாணவர்கள் சிபிஎஸ்இ அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சேர விரும்பினால், அந்த விருப்பத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆவணங்களோடு சிபிஎஸ்இ-க்கு சமர்ப்பிக்க வேண்டும். இது வரையிலும்,சேர்க்கை நடைமுறைகளை அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாய் முடிவெடுத்தன . ஆனால், இந்த புதிய விதிகளால் சேர்க்கை சம்மந்தப்பட்ட அணைத்து செயல்முறையும் சிபிஎஸ்இ போர்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

உதாரணமாக, ஒரு மாணவர் ‘சிறந்த கல்வியின்’ வாய்ப்புகளுக்காக சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர விரும்பிகிறார் என்றால்,  அவர்கள் முந்தைய ஐந்து ஆண்டின் கல்வி ஆவணங்களையும் மற்றும் விண்ணப்பிக்கும் புதிய பள்ளியின் தகவல்களையும் வழங்க வேண்டும். மேலும், சிபிஎஸ்இ-யால் ‘அங்கீகரிக்கப்படாத ’ பள்ளிகளில் படித்த  மாணவர்கள் இந்த வகுப்புகளில் சேர்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பெற்றோர்களின் தொழில் ரீதியாக ஒரு மாணவர் 9 மற்றும் 11-வது வகுப்புகளுக்காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாறினால், அவர்கள் பழைய மற்றும் புதிய தொழில் முகவரிகளையும், வங்கி கணக்குகளையும், பள்ளி மற்றும் சிபிஎஸ்இ க்கு வழங்க வேண்டும் . அடுத்தப் படியாக, பெற்றோரின் பணி மாற்றத்தால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாறினால் பெற்றோர்கள் சேர்ந்த ஸ்தாபனத்தில் நீல நிற மையால் சான்றளிக்கப்பட்ட நியமனக் கடிதத்தின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, மாணவர் புதிய நகரத்தில் தனது உறவினரோடு வசித்து வந்தால், உறவினரின் அடையாளச் சான்று மற்றும் அவர்களின் விவரங்களும் தேவைப்படும்.

ஆனால், இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பெற்றோரார்கள் சங்கத்தின் உறுப்பினர் இது பற்றி கூறுகையில் " இயல்பாகவே உரிய நேரங்களில் அந்த வருட மதிப்பெண் சான்றிதழ்களை வாங்குவதே பெரிய விஷயம் . அதிலும் கடந்த ஐந்தாண்டு கல்வி ஆவணங்களைப் பெருவது மிகப்பெரிய சவாலாக பெற்றோர்களுக்கு இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் ,அவர் பனியின் நியமனக் கடிதம் மற்றும் பிற தகவல்கள் ஒரு தனி நபருக்குத் தான் சொந்தம் . அதை,ஏன் சிபிஎஸ்இ க்கு பகிர வேண்டும் ? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

அநேக நேரங்களில் மாணவர்கள் ஆசியாரருடன் ஏற்பட்டக் கருத்து வேறுபாட்டினால் தான் பள்ளிகளை மாற்றுவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பள்ளிகளால் அதை எழுத்துப்பூர்வமாக கொடுக்க மறுக்கும். பின், இத்தகைய இடமாற்றங்கள் எவ்வாறு நடக்கும்? இந்த கோணங்களில் சிபிஎஸ்இ யின் புதிய விதி மவுனமாய் மட்டும் உள்ளன.

இந்த புதிய விதிகள் சிபிஎஸ்இ பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை . எல்லா சிபிஎஸ்இ பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்ப படிவத்தை பொது மக்களுக்கு வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக சிபிஎஸ்இ போர்டுக்கு சமர்ப்பிக்கவும் வேண்டும்.

பெயரை வெளியடக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் உ.பி.யில் இருக்கும் ஒரு பள்ளியின் முதல்வர் இவ்வாறு தெரிவித்தார், “இது ஒரு ஜனநாயக நாடு இங்கு  குழந்தை மற்றும் பெற்றோர்கள் எங்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதுவும் நாடு டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பற்றி பேசும்போது, இந்த அறிவிப்புகள் பள்ளிகளுக்கு கூடுதல் காகிதவேலையாக இருக்கும். புதிதாய் விண்ணப்பித்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க கூடுதல் நபரை நாங்கள் நியமிக்க வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கும் பரிமாற்ற சான்றிதழ் ஏற்கனவே தேவையான விவரங்களை தருகிறது. ஏன் இடமாற்றத்தை சில பெற்றோர் செய்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு நம் குழந்தையின் கல்வி பதிலாய் இருக்காது. ” என்றார்.

இந்த விதிகள் 2020 லிருந்து அமல் படுத்தப்படுகின்றன. அப்படியானால், இந்த வருடம் நீங்கள் பழைய நடைமுறையின் கீழ் உங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கலாம்.

இந்த நடவடிக்கையைப் பற்றி சிபிஎஸ்இ தனது எழுத்துப் பூர்வ அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்தது.

"தேவையில்லாத பள்ளிகளில் நடைபெறும் இடமாற்றங்களை குறைக்கின்றோம்" என்று. பாடத்திட்டத் தேர்வு கட்டுப்பாட்டாளர், சி.பி.எஸ்.இ., சன்யம் பரத்வாஜ் கூறுகையில், “பள்ளிகளை கடைசி நிமிடத்தில் மாற்றுவது மாணவர்களுக்கு உகந்த கல்விச் சூழலை வழங்காது, ஏனென்றால் புதிய வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களை நன்கு அறிந்திருக்கமுடியாத நிலைமையில் இருப்பார்கள்" என்றார்.

 

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment