Advertisment

சென்னை மாநகராட்சியில் வேலை; 236 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Chennai corporation invites application for various posts: சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு; 60 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகராட்சியின், சென்னை மாநகர சுகாதாரத் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 236 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 29.11.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி : B.sc. Nursing or Diploma in Nursing or Diploma in General Nursing and Midwife படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் படித்திருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆய்வக நுட்புனர் (DMLT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

மருந்தாளுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வித் தகுதி : : 12 ஆம் வகுப்பு மற்றும் D.Pharm படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

துணை செவிலியர்கள் (ANMs / LHVs)

காலியிடங்களின் எண்ணிக்கை: 144

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் ANM courseபடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,000

X - ray Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி : X ray technician course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

அறுவை அரங்க உதவியாளர் (OT Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி : Diploma in Operation Theatre Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,400

தரவு உள்ளீடு இயக்குனர் (Data Entry Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

கல்வித் தகுதி : பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,350

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/NUHM/NUHM.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3

மின்னஞ்சல் முகவரி: gcc2021hremployment@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/NUHM/NUHM.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Greater Chennai Corporation Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment