/tamil-ie/media/media_files/uploads/2019/10/ent-1.jpg)
chennai, guindy industrial estate, Entrepreneurs Awareness,Job,Job Searching,Training,tally course, export and import training, சென்னை, கிண்டி தொழிற்பேட்டை, தொழில் முனைவோர், தொழில், பயிற்சி, இலவசம், இலவச பயிற்சி, டேலி பயிற்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி
அம்பானி, அதானி போன்ற நாட்டின் முன்னணி தொழிலதிபர்களைப்போன்று ஆக வேண்டும் என்ற லட்சியக்கனவு காண்பவரா? ஆம் எனில், அதற்கு வழிகாட்டுகிறது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்.
தொழிலதிபர்கள் ஆவதற்கு நாம் முதலில் தொழில்முனைவோர்களாக (Entrepreneur) ஆகவேண்டும். இதற்கான இலவச பயிற்சியை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்க உள்ளது.
சென்னை கிண்டி அருகே உள்ள தொழிற்பேட்டையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது. இங்கு அவ்வப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சிகள் உட்பட பல்வேறு தொழிற் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 18ஆம் தேதி தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இலவச பயிற்சி மட்டுமல்லாது, கட்டணங்கள் அடிப்படையிலும் இங்கு பலவிதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அக்டோபர் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கான பயிற்சி முகாம்
23ம் தேதி அடிப்படை கணக்குகள் மற்றும் டேலி (Tally) நிதி மேலாண்மை கருவிகள் தொடர்பான பயிற்சி
அக்டோபர் 30 முதல் நவம்பர் 8ம் தேதி வரை தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகள் அனைத்தும் கட்டண வகுப்புகளாக நடத்தப்பட உள்ளன.
தொழில்முனைவோர் குறித்த இலவச பயிற்சி மற்றும் கட்டண பயிற்சிகளில் சேர்வதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 8668102600 மற்றும் 9444557654 என்ற எண்களில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us