scorecardresearch

சென்னையில் மத்திய அரசு வேலை; 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவன வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் மத்திய அரசு வேலை; 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவன வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் திட்ட தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: BOI PO 2023; வங்கி வேலை; 500 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

Project Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC பிரிவினர் 28 வயது வரையிலும், SC பிரிவினர் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 17,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 21.03.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR-NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600 077

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்பவர்கள் https://nie.gov.in/images/pdf/careers/NIE_PE_Advt_February_2023_09.pdf என்ற இணையதளப்பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nie.gov.in/images/pdf/careers/NIE_PE_Advt_February_2023_09.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai icmr nie recruitment 2023 for data entry operator jobs