Advertisment

ஐ.ஐ.டி-யில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Chennai IIT invites application for various posts apply soon: சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு; ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
ஐ.ஐ.டி-யில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஐஐடியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சென்னை பிரிவில் திட்ட அலுவலர், திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.11.2021

Project Officer

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B. Tech / B.E / A.M.I.E / Master’s Degree (EEE/ECE/Mech/ Materials/Physics). மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.27,500 – 1,00,000

Project Associate

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : B.Tech / B.E / A.M.I.E (EEE/ECE/ Mech/Materials/Physics) / Master’s Degree (EEE/ECE/Mech/ Materials/Physics)

சம்பளம் : ரூ.21,500 – 40,000

Junior Technician

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : ITI Certificate in EEE / ECE / Mech / Materials / Physics. மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம். மேற்கண்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி அனுபவம் தேவையில்லை.

சம்பளம் : ரூ.16,000 – 38,000

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcment%20for%20the%20post%20of%20Project%20Associate,%20Project%20Officer%20and%20Junior%20Technician.pdf  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Iit Madras Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment