Advertisment

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு: ஜேஇஇ,வயது தடை இல்லை

online B.Sc. degree in Programming and Data Science : முதல்  2.5 லட்சம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் விண்ணப்ப செயல்முறை  தானாகவே முடிவுக்கு வரும்

author-image
WebDesk
New Update
Chennai IIT

BSc in programming and data science, admission without JEE

BSc in programming and data science, admission without JEE :  உலகின் முதல் இணைய வழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான (programming, Data Science) இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கான விண்ணப்பம், ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கியது. onlinedegree.iitm.ac.in என்ற  இணையதள வாயிலாக மாணவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முதல்  2.5 லட்சம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் விண்ணப்ப செயல்முறை  தானாகவே முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தது.

Advertisment

publive-image

யார் விண்ணபிக்கலாம்?   12ம் வகுப்பு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும்,  கல்லூரிகளில் வேறு இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்களும் விண்ணபிக்கலாம்.

படிப்பிற்கு வயது தடையில்லை.  பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் இந்தப் பட்டப்படிப்பில் சேரலாம் என்று சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக, ஐ.ஐ.டி மெட்ராஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெறுவதற்கு ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால்,எந்த வரையறைகளும் இன்றி இந்த இளநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

வெளியேறும் சுதந்திரம் உண்டு : இந்த இணையவழிப் பட்டப்படிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படும் – அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme).

இந்தப் பட்டப்படிப்பின் மூன்று நிலைகளில் எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் உண்டு என்பதுடன், அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸிலிருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் கிடைக்கும்

 

 

தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும்: விண்ணப்பித்த மாணவர்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டு சிந்தனை) 4 வார பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பிவைக்கப்படும். இதன் அடிப்படையில், 4 வாரங்களின் முடிவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும்) அடிப்படைப் பட்டத்திற்குப் (foundation programme) பதிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: தகுதியின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுதித் தேர்வுக்கு ரூ.3000 கட்டணம் செலுத்த வேண்டும்.

உண்மையில், இந்த பட்டப்படிப்புக்கு போது மக்களிடையே நல்ல வர்வேரப்பை பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன் என உலகம் முழுவதிலும் உள்ள வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள்,தொழிலதிபர்கள்  என பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment