/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
சென்னை மாவட்ட சமூக நலத்துறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் உதவி மைய கட்டுப்பாட்டு அறையில் நிர்வாகி, மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Helpline Administrator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Masters of Law/ Social Work/ Sociology/ Social Science/ Psychology பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 45,000
IT Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Computers/ IT படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 33,000
Call Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நன்றாக பேசும் திறன் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dsdcpimms.tn.gov.in/landing/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Director, Directorate of Children Welfare and Special Services, No. 300, Purasaiwalkam High Road, Kellys, Chennai - 600010
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us