செமஸ்டர் இறுதித் தேர்வு தவிர, கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த சென்னை பல்கலைக்கழகம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
Advertisment
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்த அகில இந்திய தொழிநுட்பக் கல்விக் கவுன்சில், "கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தெரிவித்தது.
முன்னதாக, சட்டப்பேரவையில் அரியர் தேர்வு குறித்து பேசிய உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.அன்பழகன், " பல்கலைக் கழக மானியக்குழு, அகில இந்திய தொழிநுட்பக் கல்விக் கவுன்சில் ஆகியவற்றின் வழிகாட்டுதல் படியே, அரியர் மாணவர்கள் தேர்ச்சி குறித்து அரசு முடிவெடுத்துள்ளது என்றும், மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யும் பிரச்சனையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ) எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மாநில அரசு பிறப்பித்த உத்தரவு, ஏஐசிடிஇ-இன் வழிகாட்டுதல்களை மீறுவதாக உள்ளது என்ற கருத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது
இந்நிலையில், நேற்று நடந்த 'தி சிண்டிகேட்' அமைப்பு கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரக்கூடிய அனைத்து கல்லூரிகளிலும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி வழங்கலாம்" என்று முடிவெடுக்கப்பட்டது. புறம் மற்றும் அக மதிப்பீ்ட்டு ( இன்டர்னல் அசஸ்மென்ட்) முறையின் மூலம் குறைந்தபட்ச மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. அக மதிப்பீ்டு இல்லாத மாணவர்கள் சிறப்பு தேர்வில் தோன்ற வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்படும் மற்ற அறிவியல்/ கலை பல்கலைக்கழகங்களும் இதே போன்ற முடிவை எடுக்க திட்டமிட்டிருப்பதாக உயர்க் கல்வித்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்த அறிவிப்புக்கு தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. முன்னதாக,
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, தமிழக அரசு அரியர் மாணவர் தேர்ச்சி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், AICTE சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக வந்த செய்தியை உயர்க்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் மறுத்தார். அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என்றும் தெரிவித்தார்.