Advertisment

TN 11th Result 2022: 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 'செக்' செய்வது எப்படி?

தமிழகத்தில், 2022 மே மாதத்தில் நடைபெற்ற 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 27) வெளியாகிறது. 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE

Tamil News today live

 TN 11th Result 2022, How to check?: தமிழகத்தில், 2022 மே மாதத்தில் நடைபெற்ற 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 27-ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முடிவுகளைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.99% மற்றும் மாணவர்கள் 84.86% என்ற அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.44% பெற்று விருதுநகர் 2வது இடமும், 95.25% பெற்று மதுரை மூன்றாம் இடமும் பிடித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment