Advertisment

இறுதித் தேர்வு நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது: யுஜிசி வாதம்

இறுதியாண்டுத் தேர்வுகளை மாநிலங்கள் ரத்து செய்யலாமா? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

author-image
WebDesk
New Update
final year semester exam , UGC guidelines , semester exam news

UGC guidelines , semester exam news

கோவிட் -19 பெருந்தொற்று மத்தியில் இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற யுஜிசியின் ஜூலை 6 வழிகாட்டு நெறிமுறைகள் கட்டளை இல்லை என்றாலும்,  மாணவர்களை மதிப்பீடு செய்யாமல் பட்டம் வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Advertisment

நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.  பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக (யுஜிசி) ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, இந்த  வழிகாட்டு நெறிமுறைகள் மாணவர்களின் நலனுக்கானது. பல்கலைக்கழகங்கள் முதுகலை படிப்புக்கான மாணவர்கள்  சேர்க்கையைத் தொடங்க வேண்டும். மேலும், யுஜிசியின் வழிகாட்டுதல்களை மாநில அதிகாரிகள் மீறமுடியாத” என்று கூறினார்.

தேர்வுகள்  நடத்த உகந்த சூழல் தற்போது இல்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்தால், யுஜிசியின் வழிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாமல் போக வாய்ப்புள்ளதா? என்று நீதிபதிகள் ஆர்.எஸ் ரெட்டி,  எம். ஆர் ஷா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

யு.ஜி.சியின் ஜூலை 6 வழிமுறைகள் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை  ஒத்திவைப்பதாக அறிவித்த நீதிபதிகள், மாநில அதிகாரிகளை மீறி, குறிப்பிட்ட தேதிகளில் பல்கலைக்கழகங்களை தேர்வை நடத்தி முடிக்க யுஜிசி நிர்பந்திக்க முடியுமா? என்ற கேள்வியையும் முன்னெடுத்தனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கின் விசாரணை ந்மடைபெற்றது. ​​

துஷர் மேத்தா மேலும் கூறுகையில், "சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான தகுதிறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை தேர்வு முடிவுகள் தான் தருகின்றன. மாநிலங்கள் தேர்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரலாம், ஆனால் மதிப்பீடு செய்யாமல் பட்டங்களை வழங்கும் முடிவை  எடுக்கலாகாது   மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு தான் காலக்கெடு வழங்கப்பட்டது. இதை   கட்டளையாக எடுக்க வேன்டிய தேவையில்லை"என்று கூறினார்

அனைத்து பல்கலைக்கழகங்களும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கையைத்  தொடங்க வேண்டும். நாடு வேலை செய்யத் தொடங்கிவிட்டது. கோவிட்-19 ஒரு தேசிய பேரழிவு , மாநில அதிகாரிகள் யுஜிசியின் வழிமுறைகளை மீறமுடியாது என்றும் அவர் வாதிட்டார்.

மாணவர்களின் நலன் எது என்பதை, மாணவர்கள் தீர்மானிக்க வேண்டியதல்ல என்பதையும், ஒரு சட்டரீதியான அமைப்பு இது தொடர்பான முடிவை எடுக்கலாம் என்பதையும் நீதிபதிகள் ஏற்றனர். இருப்பினும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மாநில அரசுகள் தேர்வுகளை ரத்து கடந்த கால கால செயல்திறன் அடிப்படையில் மாணவர்களை மதிப்பீடு செய்ய முடியாதா? என்ற கேள்வி முக்கியமானது என்றும் நீதிபதிகள் கருதினர்.

மனுதாரர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா,"யுஜிசியின் ஜூலை 6  வழிமுறைகள்  இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள்  செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்க கட்டாயமாக்குகிறது  என்றும்,தகுந்த ஆலோசனை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தின் சார்பாக ஆஜரான சட்ட ஆலோசகர்," இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வை நடத்தாதது மூலம், கல்வியின் தரங்கள் நீர்த்துப்போகாது  என்று வாதிட்டார். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்கள் கூட தேர்வுகளை நடத்தாமல் பட்டங்களை தருகின்றன என்றும்  சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகம் நடத்திய ஆன்லைன் தேர்வுகளின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் வாதிட்டார்.

ஜூலை 6  வழிமுறைகள் நிபுணர் குழு பரிந்துரைகளின் அடிப்படையாகக் கொண்டவை என்றும், வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதித் தேர்வுகளை நடத்த முடியாது என்று கூறுவது தவறானது என்றும் யுஜிசி முன்பு தெரிவித்தது.

கொரோனா பெருந்தொற்று மத்தியில் பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டுத்  தேர்வுகளை ரத்து செய்வதாக டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களின் முடிவுகளை யுஜிசி கேள்வி எழுப்பியது. நாட்டில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 209 நிறுவனங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதாகவும், சுமார் 390 பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொண்டு வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிகளிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 2020இல் தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு கால அட்டவணை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு நிபுணர் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக்குழு அமைத்திருந்தது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் 29-4-2020 அன்று யுஜிசி தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு கால அட்டவணை குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. வழிகாட்டி நெறிமுறைகளை மீண்டும் பரிசீலனை செய்து, கோவிட் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரித்துக் கொண்டு வரும் இந்தச் சூழலில் புதிய கல்வியாண்டுக்கான பருவத்தை தொடங்குதல் மற்றும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் தேர்வுகள் மற்றும் சேர்க்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு நிபுணர் குழுவை யுஜிசி கேட்டுக் கொண்டது. 6-7-2020 அன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவானது, நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டது.

அதில்,  இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து. புது மனுக்கள் எதுவும் விசாரிக்கப்பாதாது, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment