தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், இஞ்ஜினியரிங் கல்லூரிகள், பல்கலைகளின் தேர்வுகள், அடுத்த செமஸ்டர் பருவத்தின் துவக்கத்தில் நடத்தப்படும்’ என, தமிழக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழக உயர் கல்வித்துறை செயலர், அபூர்வா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, இஞ்ஜினியரிங் உள்ளிட்ட அனைத்து கல்லுாரிகளுக்கும், மார்ச், 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதனால், ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
தமிழக கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், தமிழக மாணவர்களை தவிர, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர்.எனவே, அனைத்து மாணவர்களின் நலன் கருதி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும், அடுத்த செமஸ்டர் பருவத்தின் துவக்கம் அல்லது அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்தப்படும். பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்படும் தேதி, தமிழக அரசால் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கல்லூரிகள், மே மாதத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Corona virus india lockdown colleges semester exam postpone academic year
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?