கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை நடைபெறவிருந்த அனைத்து வாரியத் தேர்வுகளையும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒத்திவைத்தது.
Advertisment
வடகிழக்கு டெல்லியில் நடந்த சிஏஏ தொடர்பான கலவரத்தால், அங்கு நான்கு நாட்கள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டு வாரியத் தேர்வுகளில் சிலவற்றில் நடத்தப்போவதில்லை என்று சிபிஎஸ்சி வாரியம் நேற்று தெரிவித்துள்ளது.
வாரியம் நேற்று(ஏப்ரல் -1) வெளியிட்டுள்ள அறிக்கையில், " மேற்படி வகுப்புகளுக்கு செல்ல தேவைப்படுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்குத் தேவைப்படும் 29 தேர்வுகளை மட்டுமே நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பிராந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள் திறனுக்கான தேர்வுகள் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புக்கு நடத்தப்படாது. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஐ.சி.டி மற்றும் கணினி பயன்பாடு தொடர்பான தேர்வுகளும் நடத்தப்படாது.
நாடு முழுவதும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டிய, 12 தேர்வுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வடகிழக்கு டெல்லியில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மானவர்களுக்கு, மேலும் கூடுதலாக 11 தேர்வுகள் நடத்தப் பட வேண்டியுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி எந்த தேர்வும் நடைபெறாது. வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆறு தேர்வுகள் மட்டுமே நடைபெறும்.
“… இந்த கட்டத்தில் பரீட்சைகளுக்கான புதிய அட்டவணையை வாரியம் முடிவு செய்து அறிவிப்பது கடினம்…. சமந்தப்பட்ட அனைவருக்கும், வாரிய தேர்வு தொடங்குவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் ”என்று சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.