Advertisment

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு: சிலபஸ், தயாராகும் முறை முழு விவரம்

ஜே.இ.இ-அட்வான்ஸ் தேர்வு, வரும் மே மாதம் 17-ஆம் தேதி, நடத்தப்படும். தேர்வுக்கான அட்மிட் கார்டு மே  மாதம் 10-ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் கிடைக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jee main, Cbse 12 board Exam

JEE Advanced Information Brochure Download : 2020ஆம் ஆண்டிற்கான  ஒருகிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ-அட்வான்ஸ் ) தகவல் குறிப்பேடை  டெல்லி ஐ.ஐ.டி வெளியிட்டுள்ளது. jeeadv.ac.in என்ற இணையதளத்தில் இந்த தகவல் குறிப்பேடை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Advertisment

ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், அதிகாரபூர்வ வலைதளங்களின் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பி.இ vs பி.டெக் : தேர்வுக்கு பின் எதை தேர்வு செய்யலாம்

ஜே.இ.இ-அட்வான்ஸ் தேர்வு, வரும் மே மாதம் 17-ஆம் தேதி, நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் காலை 9.00 மணிக்கு தொடங்கி, மதியம் 12 மணிக்கு (ஐ.எஸ்.டி) முடிவடையும். இரண்டாவது தாள் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணி வரை நடைபெறும். (IST). தேர்வுக்கான அட்மிட் கார்டு மே  மாதம் 10-ம் தேதியில் இருக்கும் ஆன்லைன் மூலம் கிடைக்கும்.

ஜேஇஇ முதன்மை தேர்வில் முதல் 2,45,000 இடங்களைப் பெற்றவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதியுடையவர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் 161,319 தேர்வர்கள் தேர்வெழுதினர். இதில்,  38,705 தேர்வர்கள் வெற்றி பெற்றனர். தகுதி வாய்ந்த வேட்பாளர்களில், 5,356 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

கியூஎஸ் தரவரிசை: 'டாப் 100'-ல் சென்னை ஐஐடியின் 3 துறைகள்

முதல் முறையாக, இந்த ஆண்டு அமெரிக்காவிலும் தேர்வு மையங்கள மூலம் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு  நடத்தப்படுகிறது. அடிஸ் அபாபா (எத்தியோப்பியா), கொழும்பு (இலங்கை), டாக்கா (பங்களாதேஷ்), துபாய் (யுஏஇ), காத்மாண்டு (நேபாளம்) மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில்   2019ம் ஆண்டில் ஜேஇஇ அட்வான்ஸ்  தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment