Advertisment

செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு

சைபர் பாதுகாப்பு படிப்புக்கான நுழைவுத் தேர்வு  பிப்ரவரி 21 ஆம் தேதியும் நடைபெறும்.

author-image
WebDesk
New Update
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது.

Advertisment

இரண்டு பயிற்சி வகுப்புகளை 12 வார காலளவில் முடிக்கப்படும். பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் நுழைவு தேர்வின் மூலம் விண்ணப்பதார்கள்தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கான பதிவு இலவசம் மற்றும் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியமாகும். இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 28ல்  தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் முடிவடையும். விண்ணப்ப செயல்முறைக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டது.

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் பயற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 20 ஆம் தேதியும், சைபர் பாதுகாப்பு படிப்புக்கான நுழைவுத் தேர்வு  பிப்ரவரி 21 ஆம் தேதியும் நடைபெறும்.

DRDO offers online course on artificial intelligence, machine learning, cyber security

பாடநெறி கட்டணம் ரூ .15,000.

ஆர்வமுள்ளவர்கள் onlinecourse.diat.ac.in  என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வகுப்புகள் பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி. ஆர். டி. ஓ:  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.

Drdo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment