/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-70.jpg)
periyar university results 2019 ug, periyaruniversity.ac.in, periyar university result announced today , periyar university
வேலை தேடி அலையும் இளைஞர்களே, மாணவர்களே இன்று (26.10.18) சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது.
சென்னை, கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம் :
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இந்த வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. முகாமில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும், துபாயில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தேர்வும் வேலைவாய்ப்பு முகாமில் நடைபெற உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பை படித்து விட்டு வேலை தேடி அலையும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us